அடிப்படை வசதிகளை விரைந்து செய்யுங்க:-ஆட்சியர் உத்தரவு!

அடிப்படை வசதிகளை விரைந்து செய்யுங்க:-ஆட்சியர் உத்தரவு!

ம.பா.கெஜராஜ்,

 வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் வேலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊசூர் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் வேலூர் ஊராட்சி ஒன்றியம் அத்தியூர் ஊராட்சிக்குட்பட்ட குருமலைக்கு செல்லும் சாலைப்பணிகள் மற்றும் குடிநீர் வசதிகள் குறித்தும் மேலும் வெள்ளைக்கல் மலைக்கு செல்லும் சாலைகளையும் அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

 மேலும் அங்கு நடைபெற்று வரும் அனைத்து அடிப்படை வசதிகளையும் விரைந்து செய்து முடிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்  உத்தாரவிட்டார்.

செய்தி வெளியீடு,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர்.