பெண் போலீஸ் எங்க இருக்காங்களோ அங்க போய் ஆண் போலீஸ் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.... இன்ஸ்பெக்டர் ஓபன் மைக்கில் காட்டம்!

பெண் போலீஸ் எங்க இருக்காங்களோ அங்க போய் ஆண் போலீஸ் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.... இன்ஸ்பெக்டர் ஓபன் மைக்கில் காட்டம்!
: :

செய்தி: ம.பா.கெஜராஜ்,

திருவண்ணாமலையில் கடந்த 25-ம் தேதி மகா தீபம் ஏற்றப்பட்டதை முன்னிட்டு, பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு வாக்கி டாக்கி மூலம் அறிவுறுத்தல் வழங்கும் இன்ஸ்பெக்டர் ஒருவரின் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஆடியோவில், திருப்பத்தூர் டவுன், தாலுகா, குரிசிலாப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் பணியில் இருக்கும் போலீசாரைக் குறிப்பிட்டு பேசும் இன்ஸ்பெக்டர், பெண் போலீசார் இருக்கும் இடங்களுக்குச் சென்று ஆண் போலீசார் பேசிக்கொண்டிருப்பதாகக் கடுமையாகக் கண்டிக்கிறார்.

மேலும், மகா தீபம் ஏற்ற இன்னும் மூன்று மணி நேரம் இருக்கும் நிலையில், பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருவதாகவும், போலீசார் தங்களது பணியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்.

“ஸ்டேஷனில் பேசிக்கொண்டிருப்பதோடு இல்லாமல், இங்கேயும் பொதுமக்கள் மத்தியில் பெண் போலீசாரிடம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறீர்களா? கொஞ்சம் வேலையைப் பாருங்கள். யாராவது புகைப்படம் எடுத்து வெளியிடப் போகிறார்கள்” என்ற தொனியில் அந்தப் பேச்சு இடம்பெற்றுள்ளது.

வெளியான அந்த ஆடியோவில் கீழ்கண்டவாறு பேசப்பட்டிருந்தது. 

கவனிங்க "டீம் ஒன்" திருப்பத்தூர் டவுன், தாலுக்கா, குருசிலாப்பட்டு, ஒவ்வொரு பாயிண்ட்லயும் நான் பாக்குறேன் நம்ம உமன் போலீஸ் எங்க இருக்காங்களோ அங்க போய் மென் போலிஸ் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் 3 ஹவர்ஸ் தீபம் ஏத்த போறாங்க, கிரவுட்அதிகமா மூவ் ஆகிட்டு இருக்கு, மைக் டென்ஸ் வேற மூவ் பண்ணிட்டு இருக்காரு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இப்ப ட்ரெயினிங் டிஎஸ்பி இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு த்ரீ ஹவர்ஸ் கொஞ்சம் ஹார்டு வொர்க் பண்ணுங்க, இந்த உமன் போலீஸ் இருக்கிற இடத்துக்கு போய் மென்ஸ் போலீஸ் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அட ஸ்டேஷனில் தான் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் இங்கேயும் பப்ளிக்லேயுமா? கொஞ்சம் வேலைய பாருங்கப்பா. ஊருக்கு போய் எல்லா கதையும் பேசுவீங்க உமன் போலீஸ் கிட்டே போய் உட்கார்ந்து பேசுகிறீர்கள் நம்ப வேலைய பாருங்க அது எவன்னா போட்டோ எடுத்து போட போறேன் என்று பேசியுள்ளார்.

 சர்ச்சைக்கும். இவருக்கும் எப்போதுமே ஒரு ஒற்றுமை உண்டு இவர் ஏற்கனவே ஒரு வழக்கில் சிக்கி அது நடைமுறையில் உள்ளது.  நாகரிகம் கருதி அந்த வழக்கை நாம் குறிப்பிடவில்லை.

அதிலிருந்து தப்பி வருவதற்குள் வேறு ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் எனவே இது குறித்து உயர் அதிகாரிகள் விசாரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆடியோவில் பேசுவது திருப்பத்தூர் மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர் பாபு ரவிச்சந்திரன் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஆய்வாளர் பாபு ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, தொழில்நுட்ப உதவியுடன் தனது குரலைப் போலவே உருவாக்கி இந்த ஆடியோ தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இடம்பெற்றுள்ளதைப் போன்று தான் எதுவும் பேசவில்லை என்றும் மறுத்துள்ளார்