சிலம்பத்தில் சாதிக்கும் சிறார்கள்!

சிலம்பத்தில் சாதிக்கும் சிறார்கள்!

ஜி.கே.சேகரன்,

சிலம்பம் தற்காப்பு வீரவிளையாட்டை தொடர்ந்து செய்து காட்டி மாணவ,மாணவிகள் சாதனை படைத்தனர்.

  திருப்பத்தூர்மாவட்டம்,திருப்பத்தூரில் ஐந்தாவது முறையாக நம் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பம் போட்டி நடைபெற்றது.

  சிலம்பத்தின் பெருமையை இந்த உலகிற்கு பறைசாற்றும் வகையிலும் உலக சிலம்பம் தினத்தையும் மற்றும் தேசிய விளையாட்டை கொண்டாடும் வகையிலும் இந்த உலக சாதனை முயற்சி திருப்பத்தூர் டோமினி சேவியர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

 மேலும், சென்னை கீழ்ப்பாக்கம் டான் போஸ்கோ கலைக்கல்லூரியில் நடைபெற்ற ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்து 22 மாணவர்கள் கலந்து கொண்டு அதில் ஒன்பது மாணவ மாணவிகள் டபிள்யு எஸ் எம் ஏ அவார்ட் விருது பெற்றார்கள்.

   பின்பு மாஸ்டர் ராஜசேகர் தலைமையில் யூனியன் செல் அச்சுவேர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் 72 மாணவர்கள் கலந்து கொண்டு உலக சாதனை செய்தார்கள்.

   இதில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிலம்பம் யோகா ஆகிய தற்காப்பு கலைகளை சிறந்த முறையில் செய்து சாதனை படைத்தனர். சாதனை புரிந்த அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் மற்றும் கேடயம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.