கிரிக்கெட் வீரர்களை அழைக்கும் நறுவீ மருத்துவமனை தலைவர் G.V.சம்பத்!

கிரிக்கெட் வீரர்களை அழைக்கும் நறுவீ மருத்துவமனை தலைவர் G.V.சம்பத்!

ம.பா.கெஜராஜ்,

மாவட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி - வேலூர் டீமுக்கு வீரர்கள் தேர்வு வரும் 18 ந்தேதி வேலூர் கிரிக்கெட் சங்கம் நடத்துகிறது - நறுவீ மருத்துவமனை தலைவர் சம்பத் தகவல்.

நடைபெற இருக்கும் மாவட்டங்கள் இடையேயான கிரிக்கெட் போட்டியில் வேலூர் மாவட்ட அணிசார்பில் பங்கேற்க தகுதியான கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்வதற்கு வேலூர் மாவட்டத்தைசேர்ந்தவர்களுக்கான தேர்வு வரும் 18ந் தேதி வேலூரில் நடைபெற உள்ளதாக மாவட்ட கிரிக்கெட் சங்க

தலைவரும் நறுவீ மருத்துவமனை தலைவருமான முனைவர் ஜி.வி.சம்பத் தகவல் தெரிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக அவர் மேலும் கூறிள்ளதாவது:

நடைபெற இருக்கும் மாவட்டங்கள் இடையேயான கிரிக்கெட் போட்டியில் வேலூர் மாவட்ட அணிசார்பில் பங்கேற்க வேலூர் மாவட்டத்தில் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு செய்வதற்கானநிகழ்வு வரும் 18ந் தேதி (18.04.25) சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூர்

சேண்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள திருமதி ராஜேஸ்வரி வளாகத்தில் நடைபெறுகிறது.

அன்றுகாலை 9 மணிக்கு தொடங்கும் இத்தேர்வில் 16 வயது மற்றும் 19 வயது என இரு பிரிவாக தேர்வுசெய்யப்பட உள்ளனர்.   19 வயது பிரிவில் பங்கேற்க உள்ளவர்கள் 01.09.2006 அன்றோ அதற்கு பிறகோபிறந்தவர்களாக இருக்க வேண்டும். 16 வயது பிரிவிற்கு 01.09.2009 அன்றோ அதற்கு பிறகோ

பிறந்தவர்களாக இருக்க வேண்டும். வீரர்கள் தேர்வுக்கு வருபவர்கள் கிரிக்கெட் சீருடை மற்றும் ஆதார்அட்டையுடன் வரவேண்டும்.

இது சம்மந்தமாக மேலும் தகவல் அறிய வேலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க கெளரவ சங்க செயலாளர் எஸ். ஶ்ரீதரனை மொபைல் எண்.70105 94657 மூலமாக தொடர்பு கொண்டு விவரங்கள் அறியலாம் என்று தெரிவித்துள்ளார்