வெடி குண்டு மிரட்டல் வழக்கம் போல பொய்!

வெடி குண்டு மிரட்டல் வழக்கம் போல பொய்!

கு.அசோக்,

நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என இமெயில் மூலம் தகவல் வந்ததால் காவல்துறையினர் பாதுகாப்புடன் நீதிமன்றம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

  இராணிப்பேட்டைமாவட்டம், இராணிப்பேட்டையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடம் உள்ளது. இந்த நிலையில் நீதிமன்றத்திற்கு இமெயில் மின்னஞ்சல் மூலம் ஒரு மிரட்டல் வந்திருக்கிறது.

  நீதிமன்றத்தினுள் குண்டு வைத்துள்ளதாகவும் அது வெடிக்கும் என மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

   இதுகுறித்து  காவல்துறையினருக்கு நீதிமன்ற ஊழியர்கள் தகவல் அளித்ததை அடுத்து மக்கள் அனைவரும் நீதிமன்ற கட்டிடத்தினுள் இருந்து வெளியேற்றிய பின்னர் ஒவ்வொரு அறையாக ஒவ்வொரு இடமாக வெடிகுண்டு நிபுணர் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிர சோதனை செய்தனர்.

 பல மணி நேர சோதனை செய்தும் வழக்கம் போலவே ஒன்றும் கிடைக்கவில்லை. வருகின்றனர்.