வழக்கறிஞர்களுக்கு சம்மன் அனுப்ப போலீசாருக்கு அதிகாரம் கிடையாது! உச்சநீதிமன்றம் அதிரடி!
நரேஷ்.என்,
வழக்கறிஞர்களுக்கு சம்மன்அனுப்ப போலீசாருக்கு அதிகாரம் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. சட்டத் தின் மாட்சியை சீர்குலைக்கக்கூடாது என்றும் உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் வழக்கு ஒன்றில் தொடர்புடையோரின் மூத்தவழக்கறிஞர் ஒருவருக்கு குஜராத் காவல்துறையின் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவு சமீபத்தில் சம்மன் அனுப்பியிருந்தது.
இதுபற்றி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய்க்கு புகாராக இவ்விஷயம் சென்றது.
பின்னர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன் மற்றும் என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது "ஒரு வழக்கில் மனுதாரர்களுக்கு ஆலோசனை அல்லது வழக்கில் உதவி செய்ததற்காக காவல்துறை வழக்கறிஞர்களுக்கு சம்மன் அனுப்புவது நீதித்துறையின் மாட்சியை சிதைப்பதற்கு சமமாகும்.
மேலும், இந்த விவகாரத்தில் குஜராத் காவல்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்கப்படுகிறது" என்று நீதிபதிகள்¢திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு, அமலாக்கப்பிரிவு, வருமானவரித் துறை போன்றவை வழக்கறிஞர்களுக்கு சம்மன் அனுப்பவதை இனி நிறுத்திக் கொள்ளச்செய்யும்.
மூத்த வழக்கறிஞர்கள் அரவிந்த் தத்தர், பிரதாப் வேணுகோபால் ஆகியோருக்கு அமலாக்கத்துறை பிறப்பித்த சம்மன், உச்சநீதி மன்றம் பிறப்பித்துள்ள உத்தரவால் வாய்தா போய்விட்டது.
எஸ் யுவர் ஹானர்.

admin
