காட்பாடியை நோக்கி கஞ்சா கடத்தல்!
கு.அசோக்,
வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் 96 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒடிசாவைச் சேர்ந்த சிறுவன் உட்பட 4 பேர் கைது போலீசார் நடவடிக்கை
இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை அருகே அம்மூர் வாலாஜா ரயில் ரோடு நிலையத்தில் கஞ்சா கடத்தி வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஒடிசா மாநிலம் பரம்பூர் பகுதியைச் 17 வயது சிறுவன் வேலூர் பகுதியை காஜா மொய்தீன் (35), சின்ன அல்லாபுரம் நவீன் குமார் (27), மற்றும் ஆற்காடு சேர்ந்த ராஜேஷ் (26) இவர்கள் 4 பேரும் நேற்று முன் தினம் மாலை சுமார் 07 மணியளவில் அம்மூர் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது, காவல்துறையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் தீவிர விசாரணை மற்றும் சோதனை மேற்கொண்டனர்.
இதில், அவர்கள் மறைத்து வைத்திருந்த 98 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து, 4 பேரையும் ராணிப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் 4 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
வேலூரை மையப்படுத்தி மெகா அளவில் கஞ்சா கடத்ய்தி வரப்படுவது தொடர்கதையாக உள்ளது.
காட்பாடியில் உள்ள ஒரு தனியார் கல்வி நிலையத்தை குறிவைத்து அவை கடத்திவரப்படுவதாக கூறப்படுகிறது.

admin
