தவெக கூட்டணிக்குள் பாமக? செளமியா அன்புமணிக்கு அமைச்சர் பதவி? – அரசியல் களத்தில் பரபரப்பு!

தவெக கூட்டணிக்குள் பாமக? செளமியா அன்புமணிக்கு அமைச்சர் பதவி? – அரசியல் களத்தில் பரபரப்பு!

செய்தி: ம.பா.கெஜராஜ்,

தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், பாமக–தவெக இடையிலான அரசியல் நெருக்கம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபர் 6ஆம் தேதி மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என பாமக அறிவித்துள்ளது.

இதற்கிடையே தவெக தரப்பிலிருந்து பாமக தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், செளமியா அன்புமணியை அமைச்சரவையில் இணைப்பது குறித்தும் பேசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவெக ஆட்சி அமைந்தது முதல் பாமக தரப்புக்கும் தவெக நிர்வாகிகளுக்கும் இடையே சந்திப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

முதல்வர் விஜய், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரின் சந்திப்புகளும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.

மேலும், தவெக கூட்டணியில் பாமக இணையும் பட்சத்தில் தற்போதைய அரசியல் சமன்பாடுகளில் மாற்றம் ஏற்படுமா? கூட்டணிக்குள் உள்ள மற்ற கட்சிகளின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

இடைத்தேர்தலுக்குப் பின்னர் பாமக–தவெக இடையிலான அரசியல் நகர்வு எந்த திசையில் செல்கிறது என்பது தமிழக அரசியலில் அடுத்த முக்கிய விவாதமாக மாறியுள்ளது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத் தகவல்களாகவே பார்க்கப்படுகின்றன.