விவசாயிகள் குறைதீர்வுக் கூட்டம்! அதிகாரிகளுடன் விவசாயிகள் கடும் வாக்குவாதம்!
செய்தி:கு.அசோக்,
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை அதிகாரிகளிடம் முன்வைத்தனர்.
ஆனால், பல மாதங்களாகத் தங்களது கோரிக்கைகளைத் தொடர்ந்து வலியுறுத்தியும் இதுவரை அடிப்படைப் பணிகள்கூட நிறைவேற்றப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
இதனால் கூட்டத்தின் தொடக்கத்திலிருந்தே அதிகாரிகளின் செயல்பாடுகள் மீது அதிருப்தி தெரிவித்த விவசாயிகள், அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காணப்படுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.

admin
