பெருந்துறையில் நிகழ்ச்சியை முடித்துவிட்டுத் திரும்பிய முதல்வர் விஜய் – கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு

பெருந்துறையில் நிகழ்ச்சியை முடித்துவிட்டுத் திரும்பிய முதல்வர் விஜய் – கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு

செய்தி: ஜே. அருண் என்ட்ரிக்ஸ்,
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு கோவை வழியாகத் திரும்பிய தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், செல்லும் வழியில் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

காவல் நிலையத்திற்குச் சென்ற முதலமைச்சர், அங்கு மேற்கொள்ளப்படும் காவல் பணிகள், பொதுமக்களிடம் பெறப்படும் புகார்கள், அவற்றின் மீதான நடவடிக்கைகள் மற்றும் காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டுத் திரும்பும் வழியில் காவல் நிலையத்திற்கே நேரடியாகச் சென்று முதலமைச்சர் ஆய்வு நடத்தியது காவல்துறையினர் மத்தியில் கவனத்தைப் பெற்றுள்ளது.