மத்திய பட்ஜெட்டினால் உயிர் பெரும் தோல் தொழிற்சாலைகள்! பாடாய் படப்போகும் பாலாறு!
ம.பா.கெஜராஜ்,
மத்திய பட்ஜெட் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களான திருப்பத்தூர் வேலூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் தோல் தொழிற்சாலைகள் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வரி விதிப்பு மற்றும் சலுகைகளின் எதிரொலியாக விலை குறையும் பொருட்கள்:
17 புற்றுநோய் மருந்துகள்
மின்சார வாகன பேட்டரிகள்
விளையாட்டு உபகரணங்கள்
சோலார் பேனல்கள்
ஸ்மார்ட் போன்கள்
தோல் உபகரணங்கள்
மைக்ரோவேவ் ஓவன்கள்
லித்தியம் பேட்டரி பாகங்கள்
சிவிலியன் பயிற்சி விமான பாகங்கள்
7 உயிர்காக்கும் மருந்துகள்
நீரிழிவு தொடர்பான மருந்துகள்
வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள்
வெளிநாட்டு கல்வி
மதுபான கழிவுகள்
காலணி பாகங்கள் ஏற்றுமதி
மைக்ரோவேவ் ஓவன்
தோல் ஏற்றுமதி (தமிழகத்தின் வடமாவட்ட தோல் தொழிற்சாலைகள் உயிர்பெரும்)
எவற்றின் விலை அதிகமாகும்?
சிகரெட்
பீடி
பான் மசாலா
குட்கா
இரும்பு, நிலக்கரி, உப்பு போன்ற கனிமங்கள்.
இந்நிலையில் காலணி உதிரிபாகங்கள், தோல் பொருட்கள் ஏற்றுமதி, தோல் பாகங்கள் விலை குறைப்பு போன்ற அறிவிப்பால் பல நூறு மூடப்பட்ட தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மீண்டும் உயிர் பெரும். குறிப்பாக தமிழகத்தில் வேலூர் மாவட்டம் பேர்னாம்பட்டு, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வாணியம்பாடி, இராணிப்பேட்டை மாவட்டத்தில் இராணிப்பேட்டை, விஷாரம் உள்ளிட்ட பகுதி தோல் தொழிற்சாலைகளுக்கு இனிப்பான செய்தியாகும்.
அது மட்டுமின்றி இதனால் ஆயிரகணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
அதற்கு பாலாற்றில் தோல் கழிவு நீரை தொழிற்சாலை நிர்வாகங்கள் கழற்றிவிடாமல் இருந்தால் நலம். ஆனால் என்ன? அதற்கு அதிகாரிகள் தான் ஒழுங்காக பணியாற்றிடனும் அல்லவா?

admin
