இந்து மத கோவிலுக்கு சீர் வரிவை வழங்கிய இஸ்லாகிய குடும்பத்தினர்!
ஜி.குலசேகரன்.
மதம் என பிரிந்தது போதும்! இந்து கோவி திருவிழாவில் சீர்வரிசை கொண்டு சென்ற இஸ்லாமிய சகோதரர்கள்! மாலை அணிவித்து மரியாதை செய்த இந்துக்கள்! திருப்பத்தூரில் நெகழ்ச்சி சம்பவம்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சிகேசி. திரை அரங்கம் அருகில் உள்ள ராமசாமியார் தெருவில் ஸ்ரீ அருள்மிகு தேசத்து மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தின் 72 ஆம் ஆண்டு திருவிழா கடந்த 21ஆம் தேதி முதல் வருகின்ற 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.இந்த ராமசாமியார் தெரு பகுதியில் அனைத்து மதத்தினரும் வசித்து வருகின்றனர். இன்று நடைபெற்ற மாரியம்மன் திருவிழாவில் அதே பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய சகோதரர்கள் பட்டாசு வெடித்து மேல தாளங்கள் முழங்க மாரியம்மனுக்கு பட்டுப் புடவை, பழங்கள், பூ, என தட்டு வரிசை கொண்டு சென்று சிறப்பு தரிசனம் செய்தனர்.
இதனைக் கோயிலில் இருந்த பூசாரி இஸ்லாமியர்கள் கொண்டு வந்த பழங்கள் மற்றும் பட்டுப்புடவையை அம்மன் மீது சாத்தி சிறப்பு பூஜை செய்தார்.அதன் பின்னர் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் இஸ்லாமிய சகோதரர்களுக்கு மாலை அணிவித்து சால்வை பொருத்தியும் சிறப்பு செய்தனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அப்துல் கரீம் என்பவா கூறுகையில், சுமார் பத்து வருட காலமாக எனது தந்தை அன்வர் பாஷா என்பவர் திருவிழா நடக்கும் போது ஒருநாள் செலவை ஏற்றுக்கொள்வார். தற்போது அவருக்கு உடம்பு சரியில்லாத காரணத்தால் அதன் பின்னர் விட்டுவிட்டார்.
தற்போது அதனை நான் எடுத்து செய்ய ஆசைப்படுகிறேன் எனவே இன்று நடைபெறும் திருவிழாவின் ஒரு நாள் பூஜை மற்றும் அன்னதானம், உள்ளிட்ட செலவுகளை எடுத்து செய்வேன்.மேலும் எந்த ஒரு பகுதியிலும் இல்லாதது போல திருப்பத்தூரில் இந்த பகுதியில் நாங்கள் மதம் ஜாதி இல்லாமல் பழகி வருகிறோம் என தெரிவித்தார்.

admin
