80-களுக்கே திரும்பிய சி.எம்.முதல்வர் டீம்! புஷிஆனந்தை பாருங்களேன்! புகைப்படங்கள் வைரல்!
செய்தி: ம.பா. கெஜராஜ்,
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது தகவல் தேடலைத் தாண்டி, கடந்த கால நினைவுகளையும் கண்முன் கொண்டுவரும் வகையில் இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.
அந்த வகையில் தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு சி . ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர்கள் 1980 மாடலுக்கு மாற்றி அதற்கான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்கள்
அதாவது ‘Back to the 80s’ என்ற பெயரில் உருவாக்கப்படும் ஏ.ஐ. புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் புதிய வரவேற்பைப் பெற்று வருகின்றன.
இளைஞர்கள் முதல் 80-களில் வாழ்ந்தவர்கள்வரை பலரும் தங்களது புகைப்படங்களை அந்த காலகட்டத்தின் தோற்றத்தில் உருவாக்கி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
சாட்ஜிபிடி, ஜெமினி உள்ளிட்ட ஏ.ஐ. தொழில்நுட்பங்களின் உதவியுடன் உருவாக்கப்படும் இந்தப் படங்களில், 1980-களில் பிரபலமாக இருந்த அகலமான காலர் கொண்ட வண்ணச் சட்டைகள், பூட்கட் மற்றும் பெல்பாட்டம் பேன்ட்கள், சுருள் முடி அலங்காரம், பெரிய பிரேம் கொண்ட கண்ணாடிகள் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறுகின்றன.
அதுமட்டுமின்றி, பின்னணியில் அக்காலத்து அம்பாசிடர் கார்கள், பழைய தெருக்கள், விண்டேஜ் ஸ்டுடியோ விளக்குகள் உள்ளிட்டவற்றையும் இணைத்து, புகைப்படங்கள் உண்மையான 80-களின் காட்சிகளைப் போல் உருவாக்கப்பட்டிருக்கின்றன
இதற்கு மேலும் சுவை சேர்க்கும் வகையில், அந்தக் காலகட்டத்தில் பிரபலமான திரைப்படப் பாடல்களைப் பின்னணியில் இணைத்து பலரும் தங்களது பதிவுகளை Instagram, Facebook உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
சாதாரண இணையவாசிகள் மட்டுமின்றி திரையுலகினர் மற்றும் அரசியல் பிரமுகர்களின் ஏ.ஐ. உருவாக்கிய ‘விண்டேஜ்’ தோற்றப் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன.
தொழில்நுட்பம் வளர வளர, எதிர்காலத்தை கற்பனை செய்து காட்டிய ஏ.ஐ., தற்போது கடந்த காலத்தையும் புதிய வடிவில் மீண்டும் உருவாக்கி இணையவாசிகளை 80-களின் நினைவுகளுக்குள் அழைத்துச் செல்கிறது.

admin
