174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி! இஸ்ரேல் அரசு கௌரவிக்க முடிவு!

174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி! இஸ்ரேல் அரசு கௌரவிக்க முடிவு!

செய்தி: ம.பா. கெஜராஜ்,

விமானத்திற்குள்ளேயே ஏற்பட்ட தாக்குதல் முயற்சி... உயிரைப் பணயம் வைத்து 174 பயணிகளைக் காப்பாற்றிய இந்திய விமானி! அவரது துணிச்சலைப் பாராட்டி இஸ்ரேல் அரசு கௌரவிக்க முன்வந்துள்ளது.

துபாயிலிருந்து இஸ்ரேல் நோக்கிப் புறப்பட்ட ஃப்ளைதுபாய் பயணிகள் விமானத்தில், துணை விமானி திடீரென விமானத்தைத் தரையில் மோதச் செய்து விபத்தை ஏற்படுத்த முயன்றதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவத்தின்போது விமானத்தின் தலைமை விமானியான இந்தியாவைச் சேர்ந்த கேப்டன் ஸ்மித் மச்சார் பலத்த காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், இக்கட்டான சூழ்நிலையிலும் மனம் தளராமல் செயல்பட்ட அவர், விமானத்தின் கட்டுப்பாட்டைத் தனது கையில் எடுத்துக்கொண்டு, விமானத்தில் இருந்த 174 பயணிகளின் உயிரையும் காப்பாற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் பெரும்பாலான பயணிகள் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் ரூவன் அசார், கேப்டன் ஸ்மித் மச்சாரின் துணிச்சலைப் பாராட்டியதுடன், அவரைக் கௌரவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

விமானப் பயணிகளின் பாதுகாப்புக்காகத் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் செயல்பட்ட இந்திய விமானியின் துணிச்சல் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.

விமானத்திற்குள் நடந்ததாகக் கூறப்படும் இந்தத் தாக்குதல் முயற்சி தொடர்பான முழுமையான விசாரணை விவரங்கள் வெளியாக வேண்டியுள்ளன.