வசூல் இல்லாத கபடி போட்டி! நீதிமன்றத்துக்கு போகனுமா?

ஆர்.ரமேஷ்,

 கடந்த மாதம் திருப்பத்தூர் மாவட்ட தலைநகரில் கட்டடாய கட்டணம் வசூல் செய்து கபடி போட்டி நடைபெற்றது. இதற்கு ஒரு கல்லூரி நிர்வாகமும் உடந்தை, அந்த போட்டியின் போது செய்தி சேகரிக்க சென்ற பல நிருபர்களை அவமானப்படுத்திய சங்கதியும் நடைபெற்றது. இதை முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியும் கண்டித்திருந்தார்.

 இந்நிலையில் அதே திருப்பத்தூரில் இலவசமாக ஒரு கபடி போட்டி நடந்து முடிந்துள்ளது. இதை செய்தியாளர்கள் சிலரே முன்னின்று நடத்தியது தான் விசேஷம்.

 அது பற்றின தகவல்களைப் பார்ப்போம்.

 பி.ஆர்ஏ. ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் சிறுவர்களுக்கான இரண்டு நாள் கபடி போட்டியில் 50க்கும் மேற்பட்ட அணியினர் பங்கேற்றனர் முதல் பரிசை இளம் சிங்கம் அணியினர் 10அடி உயரம் கொண்ட கோப்பை தட்டிச் சென்றனர்

  திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த காவேரிப்பட்டு கிராமத்தில் பி.ஆர். ஏ.ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் சிறுவர்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது.

   இரவு பகல் என இரண்டு நாள் நடத்தப்பட்ட இவ்விழாவில் 50க்கும் மேற்பட்ட அணியினர் கலந்து கொண்டனர்.

  குறிப்பாக வேலூர், திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த அணியினர் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் முதல் பரிசு (10,001) பத்தாயிரத்தி ஒன்று  நியூஸ்7 தமிழ் மாவட்ட செய்தியாளர் செந்தில்குமார் வழங்கினார்.

  அதே போல் 20க்கும் மேற்பட்ட  பரிசுகள் வழங்கப்பட்டது.

  சிறுவர்களுக்கான கபடி போட்டியில் மாணவர்கள் தங்களுடைய தனித் திறமைகளை வெளிப்படுத்தினர்.

   வேலூர் இளம் சிங்கம் அணியினர் முதல் பரிசை தட்டிச் சென்றனர். அவர்களுக்கு 10,001-ம் பத்தடி கோப்பையும் வழங்கப்பட்டது.

  இரண்டாவது பரிசு (8,001) எட்டாயிரத்து ஓன்று மற்றும் எட்டடி உயரம் கொண்ட கோப்பையையும் ஒடுகத்தூர் அகரம் சிறுபுள்ளி அணியினர் பெற்று சென்றனர். மூன்றாவது பரிசு (6,001) ஆறாயிறுத்து ஒன்று மற்றும் ஆறடி உயரம் கொண்ட கோப்பை பரிசு பெரியமோட்டூர் பி ஆர் ஏ அணி தட்டி சென்றனா.

 போட்டியில் கலந்து கொண்ட அனைத்து அணியினர்களுக்கும் கோப்பைகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

 இதே போன்ற நிகழ்வு அடுத்த ஆண்டும் நடைபெறும் என்றும் வழக்கம் போலவே கட்டணம் இல்லா போட்டியாக இது திகழும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

 இந்நிலையில் கல்லூரியில் வசூல் செய்து நடத்தப்பட்ட போட்டி அடுத்த ஆண்டு இலவசமாக நடத்தப்படுமா? அல்லது நீதிமன்றத்துக்கு போகனுமா என்பது பற்றி போக போகத்தான் தெரியும்.