எந்த கேட்டை போட்டாலும் அடங்காத மணல் கொள்ளையர்கள்!

எந்த கேட்டை போட்டாலும் அடங்காத மணல் கொள்ளையர்கள்!

ஜி.குலசேகரன்,

  ஆம்பூர் அருகே  மலட்டாற்றில்  சட்டவிரோதமாக மணல் கடத்திய 5 மாட்டு வண்டிகள் மாடுகளுடன் பறிமுதல்.

ஒருவர் தப்பி ஓடிய நிலையில் நான்கு பேர் கைது.

 திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட நரியம்பட்டு மலட்டாரு பகுதியில் உமராபாத் காவல் ஆய்வாளர் கிஷோர் குமார் தலைமையில் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

 அப்போது அவ்வழியாக மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த கைலாசகிரி பகுதியை சார்ந்த தியாகு, லோகு, ராஜ்குமார் மற்றும் லிங்கா, வெங்கடேசன் ஆகியோரை பிடித்து உமராபாத் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது கைலாச கிரி பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தப்பி ஓடிய நிலையில் தப்பி ஓடியவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மாட்டு வண்டிகளை மாடுகளுடன் பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட நான்கு நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.

 அரசாங்கம் என்ன தான் பாதுகாப்பு போட்டாலும் அவற்றையெல்லாம் தகற்கிறவர்களாக இருக்கிறார்கள் மணல் கொள்ளையர்கள்.