ரூ.197 கோடியில் மருத்துவமன?நோயாளிகள் காத்திருக்க இடம் இல்லையா? வெயிலிலும் மழையிலும் தவிக்கும் பொதுமக்கள்!
செய்தி: ம.பா.கெஜா ராஜ்,
வேலூர்:வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.197.81 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
தரைத்தளம் மற்றும் 7 தளங்களுடன் அமைந்துள்ள இந்த மருத்துவமனையில் பல்வேறு சிறப்பு மருத்துவப் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் மருத்துவமனைக்கு வருகின்றனர்.
ஆனால், அவர்களுக்காக முறையான காத்திருப்போர் கூடம் இல்லாததால், மருத்துவமனைக்கு வெளியே வெயிலிலும் மழையிலும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஏற்கெனவே கவனம் செலுத்தப்பட்ட நிலையில், புதிய காத்திருப்பு அறை அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், “இவ்வளவு பெரிய மருத்துவமனை கட்டிடம் உருவாக்கப்பட்ட நிலையில், நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் அமர்ந்து காத்திருக்க ஒரு வசதியான இடம் ஏற்படுத்தப்பட வேண்டாமா?” என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுதொடர்பாக வேலூர் சட்டமன்ற உறுப்பினர், புதிய மருத்துவமனை கட்டிடத்தில் பொதுமக்களுக்காக காத்திருப்போர் கூடம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தும் காட்சிகள் அடங்கிய வீடியோவும் வெளியாகியுள்ளது.
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை வசதிகள் மட்டுமல்லாமல், அவர்கள் காத்திருக்கும் நேரத்திலும் அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

admin
