மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு!

!செய்தி: ம.பா. கெஜராஜ்,

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சித் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

மதுராந்தகம் (தனி) தொகுதியில் மரகதம் குமாரவேலும், தாராபுரம் (தனி) தொகுதியில் சத்தியபாமாவும் தவெக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மதுராந்தகம் தொகுதிக்கான வேட்பாளரான மரகதம் குமாரவேல், தவெக துணைப் பொதுச் செயலாளராகவும், தாராபுரம் தொகுதிக்கான வேட்பாளர் சத்தியபாமா திருப்பூர் தென்கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளராகவும் உள்ளனர்.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் உள்ளிட்ட சில தொகுதிகளில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் பின்னர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.

இதையடுத்து அந்தத் தொகுதிகள் காலியாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில், இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 9-ம் தேதி தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய செப்டம்பர் 16-ம் தேதி கடைசி நாளாகும்.

செப்டம்பர் 17-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெற செப்டம்பர் 19-ம் தேதி கடைசி நாளாகும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ம் தேதி நடைபெறுகிறது.

தவெக ஆட்சி அமைந்த பின்னர் நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.