கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு தகுதி பெல்ட்கள்!
கு.அசோக்,
சோளிங்கரில் கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு தகுதி பெல்ட்கள் வழங்கப்பட்டது
இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் கருமாரியம்மன் கோயில் வளாகத்தில் ஸ்ரீ போதிதர்மன் ஸ்போர்ட்ஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி இந்தியா சார்பில் பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கராத்தே பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கராத்தே நடுவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பொருளாளர் மணி துணைத் தலைவர் கோதண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் செயலாளர் ஆனந்தன் அனைவரையும் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக இந்த பள்ளியின் நிறுவனர் கராத்தே ராஜன் கலந்து கொண்டு பள்ளியில் கராத்தே பயிற்சி பெற்ற 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு வெள்ளை மஞ்சள் ஆரஞ்சு ப்ளூ கிரீன் பிரவுன் பிளாக் ஆகிய பெல்ட் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் மாணவ மாணவிகளுக்கு கராத்தே என்பது நல்ல ஒழுக்கத்தையும் மன உறுதியையும் உடல் ஆரோக்கியத்தையும் நல்ல சிந்தனையும் செயல்பாடுகளும் செய்வதற்கு மிகவும் பயன்படுகிறது. பெண் பிள்ளைகளுக்கு தற்காப்பு கலை மிகவும் அவசியமானது என்று பேசினார். அப்போது கராத்தே மாணவ மாணவிகள் பயிற்சியாளர்கள் உடனிருந்தனர்.

admin
