மன்டே பெட்டிஷனுக்கு கலெக்டரே வருவதில்லை! மதுபானக்கடையை அகற்றக்கோரும் அப்பாவி மக்கள்!
ஜி.குலசேகரன்,
ஆம்பூர் அருகே கன்னிகாபுரம் பகுதியில் மதுபான கடையை அகற்ற கோரி மாவட்ட அலுவலகத்தில் மனு அளித்த பெண் கண்ணீர் மல்க பேட்டி
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கோவிந்தாபுரம் அருகிலுள்ள கன்னிகாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் மதுபானக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த சுகுணா என்ற பெண், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
சுகுணா கூறுகையில் கன்னிகாபுரம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம். குடியிருப்பு பகுதிக்குள் இயங்கி வரும் மதுபானக் கடையை அகற்றக் கோரி பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து மனு அளித்துள்ளோம்.
ஆனால், மனு அளிக்க வரும் ஒவ்வொரு முறையும் மாவட்ட ஆட்சியர் நேரில் இல்லை. மனுவை அருகில் இருப்பவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். அதன் பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எங்கள் மனுக்கள் குப்பைத்தொட்டியில் போடப்படுகின்றனவோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது எனக் கூறினார்.
மேலும், இந்த பிரச்சினை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளித்ததுடன், அப்பகுதியில் போராட்டங்களும் நடத்தப்பட்டது, இருந்தபோதிலும் இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்தார்.
மேலும் அப்பகுதியில் உள்ள மதுபானக் கடையில் மது அருந்திவிட்டு, சிலர் சாலையோரத்தில் சிறுநீர் கழிப்பது, பெண்களை இழிவாக பேசி தொந்தரவு செய்வது, மது போதையில் வீடுகளின் அருகில் தங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டினார்.
குறிப்பாக அப்பகுதியில் பெண் குழந்தைகள் அதிகம் வசித்து வருவதால், அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்றார்.
எனவே, குடியிருப்பு பகுதியில் இயங்கி வரும் அந்த மதுபானக் கடையை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். இல்லையெனில், எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். அதுவரை அமைதியாக இருக்க முடியாது என்றும், உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் சுகுணா எச்சரித்தார்.
அரசு சம்பளம் பெறும் சம்மந்தப்ப அதிகாரிகளுக்கு என்ன அரசியல் பிரஷர் தான் காரணம் ஓகேவா.... எஸ்சார்..

admin
