திருப்பத்தூர் இராணிப்பேட்டையில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி ஊர்வலம்!

திருப்பத்தூர் இராணிப்பேட்டையில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி ஊர்வலம்!

ஜி.கே.சேகரன்,   

   திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த ஆலங்குப்பம பெத்லேகம் திருச்சபை குரு தோலை ஞாயிறு சிறப்பு ஆராதனை நடைபெற்றன இதில் திருச்சபையின் அருள் திரு போதகர் புஷ்பராஜ் கலந்துகொண்டு சிறப்பு அருளுரை வழங்கினார்.

 புதியதாக திருச்சபை சேர்வோர் ஞானஸ்நானம் மற்றும் திடப்படுத்தல் ராபோஜன விருந்து ஆகியவை முன்னதாக வழங்கப்பட்டன.

 கிறிஸ்துவ பெருமக்கள் பவனி ஆக ஊர்வலம் வருவதை இந்த நாளில் அவரை இயேசுவை வரவேற்பு விதமாக கைகளில் குருத்துவலை எடுத்துக்கொண்டு ஓசன்னா ஓசன்னா என்று பாடல் பாடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர்.

  இந்த நிகழ்ச்சியில் திருச்சபையின் செயலாளர் இம்மானுவேல் ராஜசேகரன் மற்றும் தலைவர் புஷ்பா நாதன் பொருளாளர் சிக்கந்தர் மற்றும் பொறுப்பாளர்கள் திருச்சபை மக்கள் ஒன்று கூடி சிறப்பு ஆராதனை கலந்து கொண்டு தேவ ஆசீர்வாதம் பெற்று சென்றனர் இதில் ஏராளமான கிறிஸ்தவ பெருமக்கள் கலந்து கொண்டனர்.

 இராணிப்பேட்டையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு ஒட்டி சிறப்பு பாவனி அதனை தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது ஏராளமான கிறிஸ்தவர்கள் ஓசன்னா பாடல் பாடி பவணியில் கலந்து கொண்டனர்.  

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர் பண்டிகை வருகின்ற ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக  கொண்டாடப்படுகிறது.

   இயேசு நாதர் ஜெருசுலேம் நகரில் கழுதை மீது அமர்ந்து வருகை தந்ததை அப்பகுதி மக்கள் குருத்தோலையை கையில் வைத்தவாறு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து கொண்டாடியதை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் இந்நிகழ்வானது கொண்டாடப்படுகிறது.

  இந்நிலையில் இன்று இராணிப்பேட்டை புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் மற்றும் புனித தோமையார் திருத்தலம் உள்ளிட்ட பகுதிகளில் குருத்தோலை ஞாயிறு பவானி நடைபெற்றது தேவாலயத்தில் துவங்கிய இந்த பவானியானது நகரின் முக்கிய பகுதி வழியாக முத்துக்கடை பேருந்து நிலையம் வந்தடைந்தது.

 அதனை தொடர்ந்து அங்கு சிறப்பு திருப்பலி நடைபெற்றது இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு கையில் குருத்தோலைகளை ஏந்தியவாறு ஓசன்னா  பாடல் பாடி கலந்து கொண்டனர்.