கரூர் சம்பவத்தில் அசரா கார்க் விசாரிக்க கூடாது என்ற த.வெ.கஅவரையே உளவுத்துறை ஐஜியாக நியமனம்!
ம.பா.கெஜராஜ்,
தமிழக வெற்றி கழகத்தின் ஜோசப் விஜய் கரூரில் நடத்திய மக்கள் சந்திப்பு கூட்டத்தின் போது 41 பேர் இறந்தனர், அந்த வழக்கை விசாரிப்பதற்காக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அஸ்ரா கார்க் தற்பொழுது தமிழக உளவுத்துறை பயிற்சியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
யார் இவர்?
கண்டிப்பு மற்றும் நேர்மைக்கு பெயர் பெற்ற அஸ்ரா கார்க், பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவைச் சேர்ந்தவர்.
2004-ல் நேரடி ஐபிஎஸ் ஆக தேர்வான இவர், தமிழகப் பிரிவு அதிகாரியாக பணியமர்த்தப்பட்டார். பி.இ. பட்டம் பெற்றுள்ள அஸ்ரா கார்க் தமிழ், பஞ்சாபி, இந்தி, ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடியவர்.
அப்போதைய வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உதவி எஸ்.பி.யாக பணியைத் தொடங்கி நெல்லை, மதுரை, தருமபுரி மாவட்ட எஸ்பியாக பணியாற்றி மக்களுக்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
பின்னர் பதவி உயர்வு பெற்று டெல்லி சிபிஐயில் பணியாற்றினார்.
அதைத் தொடர்ந்து மீண்டும் தமிழகம் திரும்பிய அவர், தென்மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். பின்னர் வட சென்னை காவல் கூடுதல் ஆணையராகப் பணியாற்றினார்.
அதைத் தொடர்ந்து வடக்கு மண்டல ஐ.ஜி.யாக பணியாற்றிய நிலையில், தற்போது உளவுத் துறை ஐ.ஜி. ஆகியுள்ளார்.
தென் மண்டல ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் பணியாற்றியபோது போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோதக் கடத்தலை ஒழிப்பதில் தீவிரம் காட்டினார்.
இந்த சீரிய பணியை அங்கீகரித்து தமிழக அரசு 2023-ம் ஆண்டு சுதந்திர தின விழாவில் அவருக்கு சிறப்புப் பதக்கம் வழங்கி கவுரவித்தது.
கரூரில் விஜய் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கில், அதுபற்றி விசாரிக்க அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், நீதிமன்ற உத்தரவுக்கு எதராக சிபிஐ விசாரணையைக் கோரியது தவெக.
தற்போது தவெக அரசு பதவியேற்ற நிலையில், அஸ்ரா கார்க் உளவுத் துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

admin
