கோடிகளில் மோசடி ஆதார் அட்டையை யாரிடமும் கொடுக்காதீரிகள்!
ஜி.குலசேகரன்,
அடுத்தவர்களின் ஆதார் அட்டையை வைத்து கோடிகளில் பணம் சுருட்டி அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வரும் பெரும் கும்பல் வேலூர் மற்றும் திருப்பத்தூர் பகுதிகளில் செயல்பட்டு வருகிறார்கள்.
அவர்களில் சிலர் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
ஆம்பூர் அருகே பொதுமக்களின் வங்கி ஆவணங்கள், ஆதார் மற்றும் பான்கார்டை விவரங்களை சேகரித்து, மோசடி கும்பலுக்கு அனுப்பிய பெண் உட்பட 3 பேர் கைது-உமராபாத் காவல்துறையினர் நடவடிக்கை.
சென்னையை சேர்ந்த பாரூக் என்பவர், பொதுமக்களின், வங்கி ஆவணங்கள், ஆதார் மற்றும் பான்கார்டை பயன்படுத்தி, நூதன முறையில் மோசடியில ஈடுப்பட்ட வந்ததாக, சென்னை சைபர் கிரைம் காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது, தமிழ்நாட்டில் பல்வேறு கிராமங்களில், பொதுமக்களின் வங்கி ஆவணங்கள், ஆதார் மற்றும் பான்கார்ட், விவரங்களை ஆட்கள் மூலம், சிறிய தொகைக்கு பெற்று, போலியான நிறுவனம் நடத்தி, பல கோடி ரூபாய் மோசடி, செய்து வந்தது தெரிய வந்தது.

மேற்படி பாரூக்கிற்கு, திருப்பத்தூர் மாவட்டம்,ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளிலிருந்து, கூலி தொழிலாளர்களை குறிவைத்து, அவர்களின் வங்கி ஆவணங்கள், ஆதார் மற்றும் பான்கார்டை, அனுப்பிய ஆம்பூரை சேர்ந்த ஹரி கிருஷ்ணன், முனிசாமி மற்றும் பரிமளா ஆகிய 3 பேரை உமராபாத் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் ஏழை எளிய, கூலி தொழிலாளர்களின் வங்கி விவரம், ஆதார்,பான்கார்ட் ஆவண விவரங்களை மோசடி கும்பலுக்கு அனுப்பிய நபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம், ஆம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் குறிப்பாக ஆம்பூர் சுற்றுவட்டாரத்தில் தொடர்ந்து ஜி.எஸ்.டி மோசடி கும்பல் பொதுமக்களின் வங்கி ஆவணங்களை சேகரித்து, தொடர்ந்து போலியான நிறுவனம் நடத்தி, பல கோடி ரூபாய் மோசடி செய்த நிலையில், அது தொடர்பாகவும், காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

admin
