100 நாள் வேலை செய்யும் மூதாட்டிக்கு ₹2.79 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்; வங்கிக் கணக்கு முடக்கம் – ஜோலார்பேட்டையில் பரபரப்பு!
G.Kulasekaran,
திருப்பத்தூர், ஜூலை 29:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள புதூர், படைவெட்டு அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முருகேசன் மனைவி ருக்குமணி, 100 நாள் வேலைத் திட்டத்தில் ஏரி தூர்வாரும் பணியில் ஈடுபட்டு தனது வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், 100 நாள் வேலைத் திட்டத்தின் ஊதியத் தொகையை எடுப்பதற்காக திம்மராயன்பேட்டை பகுதியில் உள்ள இந்தியன் வங்கிக்குச் சென்றபோது, அவரது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
விசாரணையில், "ஆர்.எம். டிரேடர்ஸ்" என்ற நிறுவனத்தின் பெயரில் ₹2,79,19,420 ஜிஎஸ்டி வரித் தொகை நிலுவையில் இருப்பதாகவும், அதுதொடர்பாக அனுப்பப்பட்ட நோட்டீஸின் அடிப்படையில் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
100 நாள் வேலை செய்து வாழும் மூதாட்டியின் பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் ஜிஎஸ்டி வரி நோட்டீஸ் வந்திருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ருக்குமணி கூறுகையில், "எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது. வங்கிக்குச் சென்றால்கூட கைநாட்டு வைத்துத்தான் பணம் எடுப்பேன். என் பெயரில் எப்படி இவ்வளவு பெரிய தொகைக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் வந்தது என்று தெரியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, இந்த தவறை உடனடியாக சரிசெய்ய வேண்டும்," என்று கண்ணீருடன் கோரிக்கை விடுத்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினர் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்களும் கோரிக்கை

admin
