ஆற்காடு நகர எல்லைக்குள் வெட்டு குத்து!
கு.அசோக்,
ஆற்காட்டில் முன்விரோதம் காரணமாக இளைஞரை ஓட ஓட வெட்டிய கொடூரம் - தப்பி செல்ல ஓடியும் விடாமல் 1 கிமீ தூரம் வரை துரத்தி சென்று வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கிருஷ்ணாவரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(30). இவர் சொந்தமாக ஆட்டோ கன்சல்டிங் மற்றும் உடற்பயிற்சி நிலையம் ஆகியவற்றை வைத்து நடத்தி வருகிறார்.
இவருக்கும் ஆற்காடு கொல்லப்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவருக்கும் இடையே கடந்த 2024ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்த சண்டையில் மணிகண்டன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடத்திச் சென்று சென்று தாக்கியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரத்தில் இருந்த கார்த்தி, நேற்று காலை ஆற்காடு பேருந்து நிலையம் அருகே மணிகண்டன் நடத்தி வரும் ஆட்டோ கன்சல்டிங் கடைக்கு இருசக்கர வாகனம் வாங்குவது போல கஞ்சா போதையில் சென்றுள்ளார்.
அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென தான் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை அவரது முகத்தில் தூவி, கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதனால் செய்வது அறியாமல் தவித்த மணிகண்டன், பொதுமக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும் முக்கிய சாலையின் வழியே ரத்தம் சொட்ட சொட்ட தப்பி ஓடியுள்ளார். இருப்பினும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை சாலையில் துரத்தி சென்று ஆங்காங்கே அவரை கத்தியால் வெட்டிய சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடைசியாக ஒரு கடையில் தஞ்சம் அடைந்த மணிகண்டனை ஆற்காடு நகர போலீசார் பாதுகாப்பாக மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலில் கை கால் மற்றும் தலை ஆகிய பகுதிகளில் பலத்தை வெட்டு காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது ரத்தினகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மணிகண்டன் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் முன்விரோதம் காரணமாக சரமாரியாக வெட்டிய கார்த்திக்கை கைது செய்து ஆற்காடு நகர காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கார்த்திக் தனிநபராக வந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டாரா அல்லது வேறு யாரேனும் சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்று கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி னர்.
இராணிப்பேட்டை காவல் நியைத்தைப் பொறுத்தவரை புகார்களின் மீது கட்டிங் பெற்றுக்கொண்டு சீர்பட செயல்பட தயங்குவதே இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு காரணம்.

admin
