டாஸ்மாக்......தனியார் வசமாகுதா?

 டாஸ்மாக்......தனியார் வசமாகுதா?

ம.பா.கெஜராஜ்,

  டாஸ்மாக் முறைகேடு தொடாபாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட 7 பேர் மற்றும் சில          நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் புதிதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக 45 இடங்களில் சோதனை நடத்தப்பட்ட சூழலில்  டாஸ்மாக் அனைத்தும் தனியாமயமாக இருப்பதா அறியப்படுகிறது.

 தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுபானக் கடைகளும், 2 ஆயிரம் பார்களும் செயல்படுகின்றன.

டாஸ்மாக் மூலம் தினமும் சராசரியாக ரூ.100 கோடிக்கு மேல் அரசுக்கு வருவாய் கிடைகிறது. வார விடுமுறை நாட்கள், பொங்கல், தீபாவளி, புத்தாண்டு உள்ளிட்ட விடுமுறை தினங்களில் பல மடங்கு விற்பனை அதிகரிக்கும்.

   தமிழகத்தில் மது விற்பனை தனியார் வசம் இருந்த நிலையில் கடந்த 2003-ம் ஆண்டு தனியார் மதுபான கடைகளின் உரிமங்களை ரத்து செய்து, சில்லறை விற்பனையை டாஸ்மாக் மூலம் அரசின் முழு கட்டுப்பாட்டுக்குள் தமிழக அரசு கொண்டு வந்தது.

   இதற்கிடையே, தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றது முதல் டாஸ்மாக் நிர்வாகத்தில் புதிய மாற்றங்களைக் கொண்டுவர திட்டமிட்டு வருகிறது.

    அண்மையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்? விக்னேஷ், மதுபான விற்பனையில் தனியார்மயம் குறித்து அரசு ஆலோசித்து வருவதாகத் தெரிவித்திருந்தார்.

இதற்காக தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாகவும், இந்த சட்டத்திருத்தம் விரைவில் நடக்கவுள்ள சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் எனவும் டாஸ்மாக் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

   முதற்கட்டமாக நகர்புறங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு, படிப்படியாக முழுவதுமாக தனியாரிடம் ஒப்படைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, மது விற்பனை தனியார்மயமாவதற்கு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.