அண்ணா பிறந்தநாள் விழா:பினாங்கு முன்னாள் துணை முதல்வர் பங்கேற்பு!
செய்தி: ம.பா. கெஜராஜ்,
சென்னை:பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளையொட்டி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் சென்னையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நாளை (செப்.15) மாலை 3 மணிக்கு நடைபெறும் விழாவுக்கு மதிமுக அவைத் தலைவர் ஆட்டர் ஆ.அர்ஜூனராஜ் தலைமை வகிக்கிறார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விழாவில் நிறைவுரையாற்றுகிறார். மலேசியா பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வரும் பேராசிரியருமான ராமசாமி பங்கேற்று, வைகோ எழுதியுள்ள நூல் மற்றும் குறுந்தகட்டை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார்.
விழாவில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
பேரறிஞர் அண்ணாவின் அரசியல் கொள்கைகளையும் திராவிட இயக்கத்தின் வரலாற்றுப் பங்களிப்பையும் நினைவுகூரும் வகையில் இந்த விழா நடைபெறுகிறது.

admin
