மீண்டும் பாடலுடன் தொடங்கிய குடியாத்தம் எம்.எல்.ஏ.! “TET, TRB தேர்ச்சி பெற்றும் வேலை இல்லை” — பேரவையில் சிந்து சரமாரி கோரிக்கை!

மீண்டும் பாடலுடன் தொடங்கிய குடியாத்தம் எம்.எல்.ஏ.! “TET, TRB தேர்ச்சி பெற்றும் வேலை இல்லை” — பேரவையில் சிந்து சரமாரி கோரிக்கை!

செய்தி: ம.பா. கெஜராஜ்,

சென்னை: குடியாத்தம் தொகுதி தவெக பெண் எம்.எல்.ஏ. சிந்து, இன்று மீண்டும் சட்டப்பேரவையில் பாடல் பாடி தனது உரையை தொடங்கி, தொடர்ந்து தொகுதி மற்றும் பொதுமக்கள் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை அடுக்கடுக்காக முன்வைத்து கவனம் ஈர்த்தார்.

சட்டப்பேரவையில் பேசிய அவர், “அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே” என்ற பாடலை பாடி தனது உரையை தொடங்கினார்.
தொடர்ந்து ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான பிரச்சினையை அவர் முன்வைத்தார்.


“நானும் TET, TRB தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்றிருக்கிறேன். ஆனால், எங்களுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை” என்று குறிப்பிட்ட அவர், தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும் பணி நியமனத்துக்காக காத்திருக்கும் ஆசிரியர்களின் நிலை குறித்து அரசின் கவனத்தை ஈர்த்தார்.


ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உரிய பணி வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும், அவர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு அரசு தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


பாடலில் தொடங்கி... ஆசிரியர்களின் பிரச்சினையை முன்வைத்து முடித்த சிந்துவின் பேச்சு, சட்டப்பேரவையில் இன்று கவனம் பெற்றது.