மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசை கண்டித்து திருப்பத்தூரில் அதிமுக ஆர்ப்பாட்டம்!

மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசை கண்டித்து திருப்பத்தூரில் அதிமுக ஆர்ப்பாட்டம்!

ஜி. குலசேகரன்,

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், மின் கட்டண உயர்வை கண்டித்தும் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இதன் ஒரு பகுதியாக திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் சிவராஜ் லாட்ஜ் எதிரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக மாவட்ட செயலாளர் பசுபதி தலைமை வகித்தார்.

மாவட்ட அமைப்புச் செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான கே.சி.வீரமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில், மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், காவிரி நீர் உரிமையை பாதுகாத்து விவசாயிகளின் நலனை காக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் 1,000-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் சரவணன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் தம்பா கிருஷ்ணன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.