தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம்! 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – புதிய பொறுப்புகள் என்ன?

தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம்! 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – புதிய பொறுப்புகள் என்ன?

செய்தி: ம.பா.கெஜராஜ்,

தமிழக காவல்துறையில் 13 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு செப்டம்பர் 29-ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதில் காவல் ஆணையர்கள், டிஐஜிக்கள் மற்றும் எஸ்.பி.க்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

சேலம் மாநகர காவல் ஆணையராக இருந்த கே.ஜோஷி நிர்மல் குமார், சென்னை டிஜிபி அலுவலக நவீனமயமாக்கல் பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை பெருநகர காவல் துறை கூடுதல் ஆணையராக இருந்த ஏ.ஜி.பாபு, சேலம் மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலம் சரக டிஐஜியாக இருந்த டாக்டர் சந்தோஷ் ஹதிமானி, சென்னை பெருநகர காவல் நுண்ணறிவுப் பிரிவு கூட்டு ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

லஞ்ச ஒழிப்புத்துறை டிஐஜியாக இருந்த என்.தேவராணி, சேலம் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை தீவிரவாத தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாக இருந்த பத்ரி நாராயணன், சென்னை அடையாறு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காத்திருப்புப் பட்டியலில் இருந்த எஸ்.பி. கார்த்திகேயன், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை போதைப் பொருள் தடுப்பு குற்றப் புலனாய்வுத் துறை எஸ்.பி. மதிவாணன், சென்னை பரங்கிமலை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

பரங்கிமலை துணை ஆணையராக இருந்த ஸ்ரீனிவாசன், சென்னை போதைப் பொருள் தடுப்பு குற்றப் புலனாய்வுத் துறை எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய எஸ்.பி.யாக இருந்த ஸ்டாலின், சிபிசிஐடி தென் மண்டல எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை மாநகர பாதுகாப்பு துணை ஆணையராக இருந்த சுந்தர வடிவேல், சென்னை மாநகர காவலர் நலன் பிரிவு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையராக இருந்த பாஸ்கரன், சேலம் மாநகர வடக்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக காவல்துறையில் ஒரே நேரத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்தந்தப் பிரிவுகளின் நிர்வாகப் பணிகளில் இந்த மாற்றங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

அரசின் அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, புதிய பொறுப்புகளில் அதிகாரிகள் விரைவில் பணியேற்க உள்ளனர்.