உஷ்... இது போலீஸ் செய்தி! உளவுத்துறையின் உளுந்து வடை... மேலிடத்துக்குச் சென்ற ரகசியத் தகவல்

உஷ்... இது போலீஸ் செய்தி! உளவுத்துறையின் உளுந்து வடை... மேலிடத்துக்குச் சென்ற ரகசியத் தகவல்

செய்தி: ம.பா. கெஜராஜ்,
சென்னையில் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து உளவுத்துறையின் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், கோயம்பேடு காவல் சரகத்தைச் சுற்றி எழுந்துள்ள சில தகவல்கள் காவல்துறை வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன.


வளசரவாக்கம் வீரமணி வழக்கு தொடர்பான நிர்வாக மாற்றங்களுக்குப் (யாஸ்மின் காத்திருப்போர் பட்டியலுக்கு  மாற்றப்பட்டது)பிறகு, மதுரவாயல், கோயம்பேடு உள்ளிட்ட முக்கியப் பகுதிகளைக் கண்காணிக்கும் பொறுப்பில் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொறுப்பேற்ற  அந்த அதிகாரி கோயம்பேடு பகுதியில் நடைபெறும் சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் ஒட்டும் கலசனைக் கண்டு வாய் பிளந்து விட்டாராம் மூலம் ஒட்டும் கலசனை கண்டு வாய் பிளந்து விட்டாராம். 

 அப்படி இருக்க அப்படி இருக்க அப்பகுதியில் வசூல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும், இதுதொடர்பான தகவல்கள் உளவுத்துறையின் கவனத்திற்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் மேலிடம் வரை தட்டி விடப்பட்டதாம்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மேலதிகாரிகள் விளக்கம் கேட்டதாகவும், குற்றங்களைத் தடுப்பதற்கான இலக்கை நிர்ணயிக்க வேண்டிய இடத்தில் வசூல் இலக்கு நிர்ணயிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது எனக் கண்டனம் தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் தொடர்பான அதிகாரப்பூர்வ விளக்கமும் விசாரணை விவரங்களும் வெளியாக வேண்டியுள்ளது.

கோயம்பேடு காவல் சரகத்தில் நடைபெறும் செயல்பாடுகள் இனி உயர் அதிகாரிகளின் கண்காணிப்பில் இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பெண் காவலர்களின் பணிச்சூழல்: மேலிடத்தின் கவனத்திற்கு வருமா?

இதற்கிடையே சென்னையில் பணியாற்றும் பெண் காவலர்கள் எதிர்கொள்ளும் சில அடிப்படைப் பணிச்சூழல் பிரச்சினைகளும் கவனிக்கப்பட வேண்டியவையாக உள்ளன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மகளிர் காவல் நிலையங்கள் தனித்த கட்டமைப்புடன் செயல்பட்டு வரும் நிலையில், சென்னையில் சில இடங்களில் பொதுக் காவல் நிலைய வளாகங்களுக்குள்ளேயே மகளிர் காவல் நிலையங்களும் செயல்படுகின்றன.

இதனால் பெண்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் பெண் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தனிப்பட்ட முறையில் எதிர்கொள்ளும் சிரமங்கள், விசாரணைக்கான இடவசதி, பணியிட வசதிகள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

குறிப்பாக  ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் புதிதாகக் கட்டப்பட்ட காவல் நிலையங்களிலும் மகளிர் காவல் பிரிவுகளுக்குத் தேவையான தனித்துவமான வசதிகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே பெண் காவலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

குற்றங்களைத் தடுப்பதற்கும், பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பணியாற்றும் பெண் காவலர்களின் பணிச்சூழலையும் பாதுகாப்பையும் காவல்துறை மேலிடம் கவனிக்குமா?