தமிழகம் முழுவதும் திமுக முன்னாள் அமைச்சர், எம்எல்ஏக்கள் தொடர்புடைய 25 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
செய்தி: ஜி. குலசேகரன்,
தமிழகம் முழுவதும் திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோருக்குத் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று (அக். 29) காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் திருச்சி தில்லைநகரில் உள்ள வீடு, சென்னையில் உள்ள அவரது சகோதரர் ரவிச்சந்திரனின் வீடு மற்றும் அலுவலகம், கோவையில் உள்ள மற்றொரு சகோதரர் மணிவண்ணனுக்குத் தொடர்புடைய இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் எம்எல்ஏக்கள் வீடுகளிலும் சோதனை!
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியின் முன்னாள் திமுக எம்எல்ஏ ஏ.பி. நந்தகுமார், நாமக்கல் முன்னாள் எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியோருக்குத் தொடர்புடைய இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்லில் ராமலிங்கத்தின் வீடு மற்றும் எஸ்.எஸ். கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரூ.634 கோடி பணி நியமன முறைகேடு புகார்!
கடந்த 2021–2026 திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கான நியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாகவும், அரசுப் பணிகளைப் பெற்றுத் தருவதற்காகப் பணம் வசூலிக்கப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் சுமார் ரூ.634 கோடி முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை முன்வைத்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தப் புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அந்த உத்தரவை எதிர்த்து கே.என். நேரு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை அக்டோபர் 26ஆம் தேதி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, விசாரணையின் அடுத்தகட்டமாக தற்போது சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
அரசியல் களத்தில் அதிகரிக்கும் பரபரப்பு!
ஒரே நாளில் முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்களுடன் தொடர்புடைய பல இடங்களில் சோதனைகள் நடைபெறுவது தமிழக அரசியல் களத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
சோதனைகளின்போது கைப்பற்றப்படும் ஆவணங்கள் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை அடுத்தகட்டத்துக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த நடவடிக்கைகள் தொடர்பாக திமுக தரப்பில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டுள்ளது.
வேலூர் காட்பாடியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் வீட்டில் நடந்து வரும் ரயிலை தொடர்ந்து அவர் வீட்டுக்கு வெளியே சில திமுக உறுப்பினர் ஒன்று கூடி சாலையை அதாவது பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய சாலையை அடைத்துக் கொண்டு சேர் போட்டு அமர்ந்து இடையூறு ஏற்படுத்து வருகின்றனர்.
இந்தத் தெருவுக்கு பக்கத்து தெருவில் தான் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் வீடு உள்ளது அவர் வீட்டில் இது பன்ற ரைடுகள் பலமுறை நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

admin
