சசிகலாவுடன் விஜயசாந்தி திடீர் சந்திப்பு!

ரா.மதன்,
முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் தோழியும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான வி.கே.சசிகலா பிரபல நடிகையும் ஆந்திர அரசியல்வாதியுமான விஞயசாந்தியை திடீரென்று சந்தித்தார்.
அப்போது தமிழக அரசியல் பயணத்தில் விஜயசாந்தியை பங்கேற்க அழைப்பு விட்டதாக கூறப்படுகிறது.
தீவிர அரசியல் பயணத்தை மீண்டும் தொடங்குவேன் என்று கூறிவரும் சசிகலா அதற்காக அஸ்திவாரம் போட்டு வரும் நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
இருந்தாலும் எதற்காக சந்தித்தார்கள் என்கிற விவரம் வெளியிடப்படவில்லை.