மின்வாரிய அலுவலகத்துக்குள் புகுந்த பாம்பு – ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்; ஷோகேஸை உடைத்து பிடிக்க முயற்சி!
செய்தி: வி.டி. வித்யாசாகர்,
ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மின்சார நிர்வாகப் பொறியாளர் அலுவலகத்துக்குள் திடீரென பாம்பு புகுந்ததால் ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அலுவலகத்துக்குள் பாம்பு இருப்பதைக் கண்ட ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடினர்.
குறிப்பாக பெண் ஊழியர்கள் பாம்பைக் கண்டு அச்சத்தில் உறைந்தனர்.
அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்ட நிலையில், பாம்பைப் பிடிப்பதில் அனுபவம் கொண்ட கல்நாயக் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கு வந்த அவர் அலுவலகம் முழுவதும் பல மணி நேரம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்.
இறுதியில் பாம்பு ஒரு ஷோகேஸுக்குள் புகுந்து மறைந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ஷோகேஸை உடைத்து பாம்பைப் பிடிக்கும் முயற்சியில் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் இறங்கினர்.
அரசு அலுவலகத்துக்குள்ளேயே பாம்பு புகுந்து ஊழியர்களைப் பீதியில் ஆழ்த்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

admin
