பெற்றோர்களுக்கும் போட்டி வைத்த பள்ளிக்கூடம்!

 கு.அசோக்,

 விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு திறமையை வெளிப்படுத்திய மழலைகளுக்கு மத்தியில்  பெற்றோர்களுக்கும் போட்டி வைத்து அசத்தியது ஒரு பள்ளிக்கூடம்.

 வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிளித்தான் பட்டறை அழகாபுரி நகர் பகுதியில் நியூ பிரென்ச் மாண்ட சரி மழலையர் பள்ளி இயங்கி வருகிறது.

  பள்ளியில் விளையாட்டு போட்டிகளும்,  அது தொடர்பான விழாவும் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ மாணவிகள் ( மழலையர்கள்)ஓட்டப்பந்தயம், நடன போட்டிஇசை நாற்காலி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர் 

  இதில் மழலையர்களின் பெற்றோர்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டது.

  வேகமாக பண் சாப்பிடும் போட்டி, தண்ணீர் நிரப்பும் போட்டி உள்ளிட்டவை நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற பெற்றோர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

  போட்டிகளில் வெற்றி பெற்ற பதக்கங்களும் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக கவுன்சிலர் ஜெயா முருகேசன், இசை மற்றும் நடனப் பள்ளி தாளாளர் சிந்து, காட்பாடி ரோட்டரி கிளப் பொருளாளர் அழகப்பன், மற்றும் சுபேதார் மேஜர் அருள் நம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.     

  இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் சிவசங்கரி ஆசிரியைகள்,சுமித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.