வேலூர் நறுவீ மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழா!ஜி.வி.சம்பத் தலைமையில் நடைபெற்றது!

ம.பா.கெஜராஜ்,

   வேலூர் நறுவீ மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழாவானது தலைவர் ஜி.வி.சம்பத் தலைமையில்  கொண்டாடப்பட்டது. பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் வண்ணமயமாக கடைபிடிக்கப்பட்ட இதில் பலர் பங்கேற்றனர்.

          உலகெங்கும் உள்ள தமிழர்களின் பாரம்பரிய திருவிழாக்களில் முக்கியமாக கொண்டாடப்படுவது தமிழர்களுக்கே உரிய பொங்கல் திருவிழாவாகும். நமக்கு உணவளிக்கும் உழவர் பெருமக்களை பெருமை சேர்க்கும் வகையில் கொண்டாடப்படும் பொங்கல் திருவிழாவானது சாதி, சமய, மதங்களை கடந்து அனைவராலும் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது.

  பொங்கல் திருநாளை யொட்டி வேலூர் நறுவீ மருத்துவமனையில் பொங்கல் திருவிழா சமத்துவ பொங்கலாக கொண்டாடப்பட்டது. மருத்துவமனை நிறுவனர் மற்றும் தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத்  தலைமையில்;, துணைத் தலைவர் அனிதா சம்பத், பொது மேலாளர் நிதின் சம்பத் மற்றும் அபிராமி நிதின் ஆகியோர் பொங்கல் பானைகளில் பால், அரிசி, வெல்லம் மற்றும் முந்திரி, திராட்சை உள்ளிட்டவை இட்டு இந்த சமத்துவ பொங்கலை தொடங்கி வைத்தனர்.

 தொடர்ந்து தமிழர்களின் பாராம்பரிய கலைகள் மற்றும் விளையாட்டுகளான கும்மியடித்தல், உறியடித்தில், சிலம்பம், கயிறு இழுக்கும் போட்டி, கோணிப்பை ஓட்ட பந்தயம், கரும்பு கடிக்கும் போட்டி உள்ளிட்ட போட்டிகளில்  மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று சமத்துவ பொங்கலை கொண்டாடினர்.

 சமத்துவ பொங்கல் விழாவை யொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் பரிசுகள் வழங்கி பேசுகையில், சமத்துவ பொங்கல் என்பது தமிழர்களுக்கான பாரம்பரிய திருவிழாவாகும். இதில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள், எருது விடும் திருவிழா, மாடுபிடி திருவிழா உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் ஆண், பெண் என்ற பாகுபாடின்றி பெருமளவில் பங்கேற்று தமிழர்களின் வீர விளையாட்டுகளை உலகம் முழுவதும் பரைசாற்றி வருகிறன்றனர்.

  நாட்டில் சமத்துவ பொங்கல் திருவிழாவானது சாதி, மத பேதமின்றி அனைத்து தரப்பினரும் எவ்வித பாகுபாடின்றி இத்திருவிழாவை வண்ணமயமாக கொண்டாடி மகிழ்வது தொன்று தொட்டு நடந்து வருகிறது.

  அதற்கு முத்தாய்ப்பாக வேலூர் நறுவீ மருத்துவமனையில் பல ஆண்டுகளாக இந்த சமத்துவ பொங்கல் திருவிழாவை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

   மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் இத்திருவிழா சிறப்பாக அமைந்துள்ளது.

  உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருந்து சிகிச்சைக்காக இங்கு வந்துள்ள நோயாளிகள் மற்றும் அவரது குடும்பத்தினருடன் இணைந்து பெருமையுடன் கொண்டாடும் இவ்விழாவில் மூலம் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

          இவ்விழாவில் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ், முதன்மை நிதி அலுவலர் வெங்கட்ரங்கம், தலைமை இயக்குதல் அலுவலர் சரவணன் இராமன் உள்ளிட்ட பலர் பெருமளவில் பங்கேற்றனர்.