தாலி இல்லாத தம்பதியை விரட்டிய வேலூர் போலீசார்!
கு.அசோக்,
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர்கள் தினம் அனுசரிக்கப்படும். இந்த நாள், காதலை வெளிப்படுத்தவும், உறவுகளை வலுப்படுத்தவும் ஒரு சிறப்பான நாளாக கருதப்படுகிறது.
காதலர்கள் ஒருவருக்கொருவர் ரோஜா மலர்கள், வாழ்த்து அட்டைகள், சாக்லேட் உள்ளிட்ட பரிசுகளை பரிமாறிக் கொண்டு தங்களது பாசத்தை வெளிப்படுத்துகின்றனர்.
குறிப்பாக இளைஞர்கள் மற்றும் இளம் ஜோடிகள் காதலர் தினத்தை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் சுற்றுலா தளமான வேலூர் கோட்டையில் கழுத்தில் தாலி, காலில் மெட்டி இல்லாமல் வரும் ஜோடிகளிடம், காதல் ஜோடிகளுக்கு இன்று அனுமதி இல்லை என ஜோடிகளை காவல்துறையினர் திருப்பி அனுப்பினர்.
இந்நிலையில் ஆம்பூர் பகுதியை சேர்ந்த புதிதாக திருமணமாகிய ஒரு இளம் ஜோடி வேலூர் கோட்டைக்கு வந்துள்ளனா.¢ அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர்கழுத்தில் தாலி, காலில் மெட்டி இல்லாததால் இன்று காதலருக்கு அனுமதி இல்லை என கோட்டையுள் அனுமதிக்க மறுத்துள்ளனர்.
அப்போது அந்த ஜோடிகள் எங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது எங்களை ஏன் அனுமதிக்க மறுக்கிறீர்கள் என காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பெண் கழுத்தில் தாலி, காலில் மெட்டி இல்லாதது இப்போது டிரென்டாக இருக்கிறதுஎன வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன். காவல்துறையினரிடம் திருமண புகைப்படத்தை காண்பித்து இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு தாலி கட்டுவதில்லை அதுபோலத்தான் நாங்களும் இந்துக்கள் மட்டும் தான் தாலி கட்டுவார்கள் எனக்கூறினார்.
இந்த வாக்குவாதத்தினால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு காணப்பட்டது.
கழுத்தில் தாலி இல்லாததை காரணம் காட்டி தம்பதியை கோட்டைக்குள் அனுமதிக்காமல் விரட்டிய போலீசாரால் பரபரப்பு ஏற்பட்டது

admin
