டி.கே.மோகன் இல்லத்திருமணம்! மணமக்களை நேரில் வாழ்த்திய முதலமைச்சர்!

டி.கே.மோகன் இல்லத்திருமணம்! மணமக்களை நேரில் வாழ்த்திய முதலமைச்சர்!

ம.பா.கெஜராஜ்,

 திமுக வைச்சேர்ந்த பிரமுகரின் வீட்டுக்கு நேரில் சென்ற முதல்வர் அங்கு மணமக்களை வாழ்த்தினார்.

  முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 14 ஆம் தேதியன்று திருப்பத்தூர் மாவட்டத்துக்கு வந்து சென்றார். வடக்கு மண்டல வாக்குச்சாவடிகுழு மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், முன்னதாக ரோட் ஷோ நடத்தினார்.

  இந்நிலையில், திருப்பத்தூர் திமுக மாவட்ட துணைச் செலாளராக பணியாற்றிக் கொண்டிருக்கும் டி.கே.மோகன் - அனிதா அவர்களின் மகள் மருத்துவர் எம்.இனியா (எ) ரேவதிக்கும் பொறியாளர் எஸ்.சுபாஷ்-க்கும் திருமணம் நடைபெற்றது.

அப்படியிருக்க டி.கே.மோகன் இல்லத்துக்கு சென்ற முதலமைச்சர் மணமக்களை வாழ்த்தி பரிசளித்தார்.

அதே போல் அமைச்சர் எ.வ.வேலு அவர்களும் மணமக்களை வாழ்த்தினார்.

   மணமக்களும் முதல்வரிடமும், அமைச்சரிடமும் ஆசிபெற்றனர்.

பின்னர் 15 ஆம் தேதியன்று திருப்பத்தூரில் உள்ள ஒய்.டி.கே. என்கிற திருமண மகாலில் வரவேற்பு நிகழ்ச்சி பிரமாண்டமாக நடத்தப்பட்டது.

  இதில் அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.