சீனியர் மீது வழக்கறிஞர்கள் சங்கத்தில் புகார்:- ஆடியோ வெளியீடு!

சீனியர் மீது வழக்கறிஞர்கள் சங்கத்தில் புகார்:- ஆடியோ வெளியீடு!
: :

Ma.ba.g,

வெயிலூரில் சீனியர் ஒருவர் அரசு தரப்பில் உள்ளார், அவருடன் ஒரு வழக்கறிஞர் உரையாடும் ஆடியோ வெளியாகி அந்த நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 வழக்கறிஞர் ஒருவர் பிணை தொடர்பாக அந்த அரசு தரப்பு சீனியரை நாடியதில், பிணையை மையப்படுத்தி பணம் கொடுக்கல் வாங்கல் நடந்துள்ளது. அதில் ஏற்பட்ட மனகசப்பே இந்த ஆடியோவின் சாரம்சம்.

 அதாவது அந்த அரசு தரப்பு சீனியர் சம்மந்தப்பட்ட வழக்கறிஞரின் கிளையன்ட்டிடம் நேரடியாக தொடர்புகொண்டு பல முறை பேசியிருக்கிறாராம். இதனால் மனம் கசந்த கிளையன்டின் வழக்கறிஞர், மேற்படி சீனியரிடம் அதுபற்றி செல்போனில் கேட்டுள்ளார். அப்படியே அதை பதிவும் செய்து வைத்துக் கொண்டு சக வழக்கறிஞர்களிடம் போட்டுக் காட்டியிருக்கிறார்.

 அந்த ஆடியோ தற்போது பொது வெளியில் பரவியதால் கழுவி கழுவி ஊத்தப்பட்டிருக்கிறது.

 இந்நிலையில் நீங்க எந்த தரப்புன்னா இருங்க சாமி, ஆனால் நீங்களும் வழக்கறிஞர்தானே என்று பொங்கிய அந்த வழக்கறிஞர் அவர்களது சங்கத்தில் எழுத்து மூலமாக புகார் அளித்திருக்கிறார்.