ஆம்பூர் அருகே அரசு பள்ளி முதல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை… அதிரடி ஆய்வில் இறங்கிய ஆட்சியர் நல்லசிவன்!
செய்தி: ஜி. குலசேகரன்,
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் நல்லசிவன் பல்வேறு இடங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நடைபெற்ற இந்த கள ஆய்வின்போது, மாதனூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்ற ஆட்சியர், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பள்ளி வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டிடங்களின் பணிகளை ஆய்வு செய்தார்.
.தொடர்ந்து, மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுமார் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடத்தைப் பார்வையிட்டார்.
கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், மாதனூர் ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களிலும் ஆட்சியர் நல்லசிவன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தமிழரசி, ஆம்பூர் வட்டாட்சியர் பாரதி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், காவல்துறையினர் உடனிருந்தனர்.

admin
