செங்கம் மாணவர் விடுதியில் 74 வது குடியரசு தின விழா!

செங்கம் மாணவர் விடுதியில் 74 வது குடியரசு தின விழா!

K.Sakthivel,

 செங்கம் ஆதி திராவிடர் மாணவர் விடுதியில் 74 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது

 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் 74 வது குடியரசு தின விழா விமர்சியாக கொண்டாடப்பட்டது.

 இந்த நிகழ்ச்சியில் விடுதி காப்பாளர் ஆறுமுகம் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.

 இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தனி வட்டாட்சியர் சுப்பிரமணியன் மாணவர் விடுதி கமிட்டி உறுப்பினர்கள் பேர்லெஸ் குப்புசாமி சென்னம்மாள் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

 மேலும் விடுதி காப்பாளர் ஆறுமுகம் மாணவர்களுக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கும் நினைவு பரிசுகளை வழங்கி இனிப்புகள் வழங்கி குடியரசு தின விழாவை விமர்சியாக கொண்டாடி மகிழ்ந்தார்.

 இந்த நிகழ்ச்சியில்  ஆதிதிராவிடர் மாணவர் விடுதி மாணவர்கள் அணிவகுத்து நின்று தேசியக்கொடிக்கு வீரவணக்கம் செலுத்தி மரியாதை செலுத்தினர்.