சிற்றுண்டியுடன் கொண்டாடப்பட்ட அஜித் பிறந்த தினம்!

சிற்றுண்டியுடன் கொண்டாடப்பட்ட அஜித் பிறந்த தினம்!

 ஜி.கே.சேகரன்,

ஆம்பூரில் நடிகர் அஜித் குமார் பிறந்தநாளை துப்புரவு பணியாளர்களுடன் சேர்ந்து துப்புரவு பணியாளர்களுக்கு  சால்வை அணிவித்து அரிசி மற்றும் அன்னதானம் வழங்கி, கேக் வெட்டி கொண்டாடினர்.

  தமிழ் சினிமாவில் தன்னுடைய கடின உழைப்பால் முன்னேறி தமிழ் ரசிகர்களால் தல மற்றும் ஏ.கே என அன்புடன் அழைக்கபடும் நடிகர் அஜித் குமா£ரின்  பிறந்தநாளையொட்டி திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ஏ- கஸ்பா பகுதியை சேர்ந்த ஆம்பூர் நகர்மன்ற உறுப்பினர் வசந்த்ராஜ் தலைமையில் கொண்டாட்டம் நடைபெற்றது.

 அஜித் ரசிகர்கள், ஏ- கஸ்பாமந்தகரை பகுதியில் பிறந்தநாள் வாழ்த்து பேனாகளை வைத்திருந்தனர்.

 பின்னர் ஆம்பூர் நகராட்சி துப்புரவு பணியாளர்களுடன் சேர்ந்து  கேக் வெட்டி, துப்புரவு பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து, அவர்களுக்கு தலா 2 கிலோ மதிப்பிலான அரிசிகள் வழங்கினர். மேலும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிற்றுண்டி வழங்கி அஜித் குமார் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடினர்.