மருத்துவ காப்பீடு அட்டை தாருங்கள் மே தின கோரிக்கை! பாமகவினரும் நிகழ்ச்சியை கடைபிடித்தனர்!

மருத்துவ காப்பீடு அட்டை தாருங்கள் மே தின கோரிக்கை! பாமகவினரும் நிகழ்ச்சியை கடைபிடித்தனர்!

ஜி.கே.சேகரன்,

 திருப்பத்தூர் நகர துப்புரவு பணியாளர் சங்கம் சார்பில் 138 வது மே தினத்தை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது.

 திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு திருப்பத்தூர் நகர துப்புரவு பணியாளர்கள் சங்கம் சார்பில் 138 வது மே தினத்தை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

அதில் முக்கிய கோரிக்கைகளாக அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் மருத்துவ காப்பீடு அட்டை வழங்க வேண்டும், சிபிஎஸ் பணம் பல வருடங்களாக கட்டாமல் நிலுவையில் உள்ளது.

  அந்த பணத்தை உடனடியாக செலுத்தி தொழிலாளர்கள் வைப்பு நிதியில் சேர்க்க வேண்டும், துப்புரவு பணியாளர்களுக்கு கூட்டுறவு சொசைட்டியில் கடனை வழங்க ஆறு மாதம் தவணை உடனடியாக வழங்க வேண்டும்.

 காண்ட்ராக்ட் அடிப்படையில் பணிபுரியும் தினக்கூலி துப்புரவு பணியாளர்களுக்கு தினக்கூலி தொகையை அதிகப்படுத்தி வழங்க வேண்டும்.

 காண்ட்ராக்ட் நிலுவையில் உள்ள தினக்கூலியை உடனடியாக வழங்க வேண்டும்.

துப்புரவு காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

  சிறப்பு அழைப்பாளராக ஏ.ஐ.டி.யு.சி. மாநில துணை தலைவர் தேவதாஸ் கலந்து கொண்டா£.¢ மாவட்டத் தலைவர் வெங்கடேசன். கொடியேற்றியவர்  ஆறுமுகம் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 திருப்பத்தூர் இருசக்கர பழுது பார்ப்போர் நலச்சங்கம் சார்பில் சுமார் ஒரு கிலோ மீட்டர் அளவில் மே தினத்தை முன்னிட்டு அமைதி பேரணியாகச் சென்றனர்.

திருப்பத்தூர்

   திருப்பத்தூர் வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கம் சார்பில் தலைவர் மணவாளன் தலைமையில்  சுமார் 200க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி வரை சுமார் ஒரு கிலோமீட்டர் வரை அமைதி  பேரணியாக வந்தனர்.

அதன் பின்னர் பாச்சல் கிராமத்தில் உள்ள இருசக்கர வாகன பழுது பார்ப்போர் சங்க அலுவலகத்தில் சங்ககொடியை ஏற்றி வைத்தனர்.

இந்த நிகழ்வில் துணைத்தலைவர் குபேந்திரன் செயலாளர்கள் அன்பு, சீனிவாசன், சங்கர், திருப்பதி, மூர்த்தி, சரவணன், சங்க நிர்வாகிகள் என பலர் இந்த அமைதி பேரணியில் கலந்து கொண்டனர்.

பாமக,

 அதே போல் மே தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள் பேட்டை பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் திருப்பத்தூர் கிழக்கு மாவட்டம் வாணியம்பாடி நகர செயலாளர் அன்பரசு தலைமையிலும்,  மாவட்ட தலைவர் குமரவேல் முன்னிலையிலும் பொது மக்களுக்கும் மற்றும் பேருந்து பயணிகளுக்கும்  நீர், மோர், குளிர்பானங்கள் மற்றும் பழ வகைகள் போன்றவற்றை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

  இதில் சிறப்பழைப்பாளராக திருப்பத்தூர் கிழக்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் குளிர்பானம் பழங்களை வழங்கினார்.