ஆட்சியர் அலுவலகத்தில் புரோக்கர்களா? திருநங்கை உதவியுடன் தீக்குளிக்க முயன்ற பெண்!
ஜி.குலசேகரன்,
ஆட்சியர் அலுவலகத்தில் ஜாப்ராபேட்டை அஞ்சலகத்தில் சிறுசேமிப்பு செய்த ரூ.3. 56 லட்சம் பணத்தை ஏமாற்றிய பெண் அஞ்சலக ஊழியரை கைது செய்து பணத்தை மீட்டுத்தர பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட பெண் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் தீகுளிக்க முயற்சி - வீட்டுமனைபட்டா கேட்டு மனு அளிக்க வேந்த மூதாட்டி மயங்கி விழுந்ததால் பரபரப்பு
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு கூட்டமானது மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் நடந்தது.
இதில் காட்பாடி ஜாப்ராபேட்டை பகுதியை சேர்ந்த கவிதா என்ற பெண் மனு அளிக்க வந்தார் அப்போது அவர் திடீரென உடலில் மண்ணெண்ணய் ஊற்றிகொண்டு தீகுளிக்க முயன்றார்.
அவர் ரூ.3. 56 லட்சம் பணத்தை ஜாப்ராபேட்டை அஞ்சலகத்தில் சிறுசேமிப்பு செய்ததாகவும் ஆனால் அங்கு பணியாற்றிய பெண் ஊழியர் சுடர் என்பவர் நூற்றுக்கணக்கான மக்களின் பணத்தை எடுத்துகொண்டு தப்பி தலைமறைவாகி விட்டாராம்.
அவர் இதுவரையில் ரூ.55 லட்சத்திற்கும் மேல் மக்கள் பணத்தை ஏமாற்றி தலைமறைவானதால் சுடரை கைது செய்து பணத்தை மீட்டுத்தரகோரி தீகுளிக்க முயன்ற கவிதாவை காவல்துறையினர் ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
இதே போல சேண்பாக்கத்தை சேர்ந்த பத்மா என்ற மூதாட்டி தனக்கு வீட்டுமனைப்பட்டா வேண்டுமென கேட்டு மனு அளிக்க வந்து வெய்யிலின் தாக்கத்தால் அவர் மய்ங்கி விழுந்தார் அவரையும் காவல்துறையினர் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பினார்கள் இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது

ஆட்சியர் அலுவலகத்தின் அனைத்து நுழைவு வாயிலிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தும் தீக்குளிப்பதற்காக பெட்ரோலுடன் வருகை தரும் சம்பவம் அடிக்கடி நடைபெருகிறது.
தற்போது தீக்குளிக்க முயன்ற கவிதாவுக்கு ஒரு திருநங்கை உதவியதாகவும், அவரைப்போல நிறைய புரோக்கர்கள் ஆட்சியர் அலுவலகத்தினுள் சுற்றித்திரிந்து அப்பாவிகளிடம் ஏமாற்றி பணம் பறிப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் திங்கள் மனுவன்று புகார் அளித்தால் உடனடியாக தீர்வு கிட்டும் என்று இன்னமும் மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால் ஆட்சியாளர்கள் அன்றைய தினத்தில் தான் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளை நடத்தி மாவட்ட அதிகாரிகளை சத்தாயித்து வருகிறார்கள்.
மக்களையும் கொஞ்சம் கவனியுங்கள் அரசே!

admin
