குளுகுளு மாவட்டத்துக்கு இரண்டு எஸ்பிக்களா? தனி நபரின் கட்டுப்பாட்டில் காவல் துறை?
ச.சரவணன்,
குளு குளு மலையும் சேர்ந்தே உள்ள அடிவார மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் (ஷிறி) இருக்க, மற்றோறு புறம் மாவட்ட காவல் துறையை தனி நபர் கட்டுப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.
இது குறித்து காவல்துறையினரே குமுறிக் கொண்டிருக்கிறார்களாம்.
மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் பல்வேறு குற்றச் சம்பவங்கள் குறித்த தகவல்கள், அரசு நியமித்துள்ள காவல் கண்காணிப்பாளருக்குச் செல்வதற்கு முன்பாகவே, அந்தத் குறிப்பிட்ட தனி நபருக்குச் சென்று விடுவதாகக் கூறப்படுகிறது. சம்பவ இடங்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் முக்கிய ஆதாரங்கள் அனைத்தும் முதலில் அந்தத் தனி நபருக்கு அனுப்பப்பட்டு, அவர் மூலமாகவே எஸ்பி-யின் கவனத்திற்குச் செல்வதாக அவர்கள் புலம்பி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் எழுப்பப்படும் முக்கிய குற்றச்சாட்டு என்னவெனில், குற்றச்சாட்டுகள் மற்றும் தடயங்கள் அடங்கிய ரகசிய ஆவணங்களை அந்தத் தனி நபர் தனியாக வைத்துள்ள சில சமூக ஊடகக் குழுக்களில் பதிவிடுவதாகத் தெரிகிறது.
"காவல் துறையின் ரகசிய ஆவணங்கள் மற்றும் புலனாய்வுத் தகவல்கள் இவ்வாறு பொதுவெளியில் கசிவதால், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உஷாராகி தப்பியோட இதுவே ஏதுவாக அமைந்துவிடுகிறது," என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சமூக விரோத மற்றும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்களே இந்தத் தனி நபரின் குழுக்களிலும் உறுப்பினராக சேர்த்து தகவல்களை பகிர்ந்து கொள்ளக்கூடும் என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. இதன் காரணமாக, சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட நபர்கள் தப்பிவிட நேரிடலாம் என்ற அச்சமும் மக்களிடையே எழுந்துள்ளது.
இத்தகைய ரகசிய ஆவணப் பகிர்வுகள் காவல் துறையின் மாண்பையும், அதன் நம்பகத்தன்மையையும் சீர்குலைக்கும் வகையில் உள்ளது. எனவே, காவல் துறையின் ரகசியங்களை அரசு சாரா தனி நபருக்குப் பகிர்வதை உடனடியாகத் தவிர்க்க வேண்டும் என்றும், தவறு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காவல் துறையின் கண்ணியத்தைக் காக்கவும், சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தவும், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா என்ற கேள்வி தற்போது மாவட்ட மக்களிடையே பலமாக எழுந்துள்ளது.
எஸ்.பி.அவர்கள் கண்டிப்பானவராக இருந்தாலும் கூட அவரை சுற்றியிருப்பவர்கள் இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு வழி வகுக்கிறார்களாம்.
இவனுங்க திருந்தவே மாட்டார்களா?

admin
