தடுக்கிறதா தனியார் பல்கலைக்கழகம்!?“வேலூரில் கேந்திரிய வித்யாலயா பள்ளி வேண்டும்!” – முன்னாள் முப்படை வீரர்கள் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

தடுக்கிறதா தனியார் பல்கலைக்கழகம்!?“வேலூரில் கேந்திரிய வித்யாலயா பள்ளி வேண்டும்!” – முன்னாள் முப்படை வீரர்கள் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

கு. அசோக்,

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, அனைத்து முன்னாள் முப்படை ராணுவ வீரர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் விநாயகமூர்த்தி தலைமை வகித்தார். தண்டபாணி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையிலான ராணுவ வீரர்களைக் கொண்ட மாவட்டங்களில் வேலூர் மாவட்டமும் ஒன்றாகும். வேலூர் மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க வேண்டும் என ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளியை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் திரளான முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். பின்னர் ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை அதிகாரிகளிடம் அளித்தனர்.

ஏற்கனவே இப்ப பள்ளிக்கூடம் அமைப்பதற்கான உத்தரவு எல்லாம் மத்திய அரசிலிருந்து வந்த போதும் கூட ஒரு தனியார் பல்கலைக்கழகம் சுயநலத்துடன் அப்பள்ளி வராமல் பார்த்துக் கொண்டதாம். 

என்ன செய்வது அவர்களிடம் தான் எல்லா அதிகாரிகளும் ஓடுகிறார்களாம்.