**தாராபுரத்தில் திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் வியூகம் பலிக்குமா?

**தாராபுரத்தில் திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் வியூகம் பலிக்குமா?

செய்தி: ம.பா. கெஜராஜ்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது.

கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று பின்னர் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த சத்யபாமா, மீண்டும் இதே தொகுதியில் தவெக வேட்பாளராக களம் இறங்கியிருப்பது தேர்தல் களத்தில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. 

திமுக சார்பில் வழக்கறிஞர் சுகன்யா களமிறங்கியுள்ள நிலையில், அவருக்காக முன்னாள் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுகவின் ஆட்சிக்கால திட்டங்களை முன்வைத்து வாக்காளர்களை சந்திக்கும் பணியும் தீவிரமடைந்துள்ளது. 

அதே நேரத்தில், தாராபுரத்தில் ஏற்கெனவே வெற்றி பெற்ற அனுபவத்துடன் மீண்டும் களமிறங்கியுள்ள சத்யபாமா தலைமையிலான தவெக அணியும் இளைஞர்கள் மற்றும் சமூக வலைதள வாக்காளர்களை குறிவைத்து பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறது. 

அதிமுக சார்பில் பானுமதியும், நாம் தமிழர் சார்பில் கார்த்திகாவும் களத்தில் உள்ளனர். இதனுடன் இடதுசாரி கட்சிகளும் தனித்துப் போட்டியிடுவதால் தாராபுரத்தில் போட்டி பலமுனையாகியுள்ளது. 

இதனால் திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் வகுக்கும் தேர்தல் வியூகம் வாக்காளர்களிடம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்? ஏற்கெனவே தொகுதியில் வெற்றி பெற்ற சத்யபாமாவின் தனிப்பட்ட அரசியல் செல்வாக்கு எந்த அளவுக்கு வெளிப்படும்? பலமுனைப் போட்டியில் வாக்குகள் எவ்வாறு பிரியும்? என்ற கேள்விகள் தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

வீடு வீடாக பிரச்சாரம் மட்டுமின்றி சமூக வலைதளங்கள், வாட்ஸ்அப் குழுக்கள், ரீல்ஸ் உள்ளிட்ட டிஜிட்டல் பிரச்சாரங்களும் வேகமெடுத்துள்ளன. 

அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தாராபுரம் தொகுதி யாருக்கு சாதகமாக மாறப்போகிறது என்பதை வாக்காளர்களின் தீர்ப்பே முடிவு செய்யும். தற்போது ஒவ்வொரு அணியும் தங்களது பலத்தை நிரூபிக்க தீவிர களப்பணியில் இறங்கியுள்ளன.

இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சோசியல் மீடியாக்கள் விருச்சுவர் வாரியார் அமைதியாக இருக்கின்றனர். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட திமுக பல்வேறு ஊடகங்கள் வாயிலாக அரசுக்கு எதிரான கருத்துக்களை பரப்பி விடுகிறது அவை ஓரளவுக்கு மக்களை கூட சென்று ரீச் ஆகிறது. 

எனவே விரிச்சுவல் வாரியர்ஸ் உடனடியாக களம் கொண்டால் தாராபுரத்தில் விசில் சத்தம் பறக்கும்.