பா.ம.க. பிரமுகர் 10 குண்டுகள் பாயச் சுட்டுக்கொலை! கத்தியால் தாக்கப்பட்ட போலீசார்! பதிலுக்கு போலீசார் சுட்டு பிடித்தனர்!எஸ்.பி.க்கள் முகாம்! துப்பாக்கிகள் பதுக்கப்பட்டுள்ளனவா? குடியாத்தத்தில் பெரும் பதற்றம்!
செய்தி:ஜி.குலசேகரன்,
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகரை நாட்டுத் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுக் கொலை செய்த வழக்கில் பூவரசன் என்கிற நபர் பிடிபட்டார். அப்போது அவர் காவல்துறையினரையே கத்தியால் வெட்டிய சூப்பர் ராஜ்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து போலீசார் நடத்திய பதில் துப்பாக்கிச் சூட்டில் பூவரசன் காலில் குண்டு பாய்ந்து பிடிபட்டார். இந்த மோதலில் காவல்துறை அதிகாரிகள் இருவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது பற்றின விவரம் வருமாறு,
குடியாத்தம் அடுத்த சேங்குன்றம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானவேல் (43). விவசாயியான இவர் பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகர். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த பூவரசன் (28) என்பவருக்கும் நீண்டகாலமாக முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட 13 வழக்குகள் பூவரசன் மீது நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், குண்டர் தடுப்புச் சட்டத்திலும் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர் எனத் தெரிகிறது.
தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்திருந்த ஞானவேலை, பூவரசன் தொலைபேசியில் தொடர்புகொண்டு எங்கே இருக்கிறாய் எனக் கேட்டுள்ளார். இதையடுத்து ஞானவேல் சேங்குன்றம் பேருந்து நிறுத்தம் அருகே தனது நண்பரும் பா.ம.க. பிரமுகருமான ரகு (40) என்பவருடன் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த பூவரசன் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுள்ளார்.
பட்டாசுச் சத்தம் ஊரெங்கும் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், துப்பாக்கிச் சத்தத்தையும் முதலில் பட்டாசு வெடிப்பதாகவே கிராம மக்கள் நினைத்துள்ளனர். பின்னர் ஞானவேலின் அலறல் சத்தம் கேட்டதும் அங்கு விரைந்து சென்ற பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஞானவேல், ரகு ஆகிய இருவரையும் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு ஞானவேல் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது உடலில் முகம், கழுத்து, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 10 துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது. ரகுவின் வலது கையிலும் குண்டு பாய்ந்து காயமடைந்தார்.

இதையடுத்து பூவரசனைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவரைப் பிடித்த போலீசார், அவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கி எங்கே உள்ளது எனக் கேட்டுள்ளனர். அதற்கான இடத்தைக் காட்டுவதாகக் கூறி போலீசாரை அழைத்துச் சென்றபோது, திடீரென பூவரசன் காவல்துறையினரை நோக்கித் கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் குடியாத்தம் கிராமிய காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜா கையில் காயமடைந்தார். மற்றொரு காவலர் இம்தியாஸ் என்பவரும் காயமடைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் தற்காப்பு நடவடிக்கையாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பூவரசனின் காலில் குண்டு பாய்ந்தது. தப்பியோட முயன்ற அவர் பிடிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன் நேரில் சென்று சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்ஷய் அனில் வாகரேவும் அங்கு முகாமிட்டு பாதுகாப்பு மற்றும் விசாரணைப் பணிகளைக் கண்காணித்து வருகிறார்.
டிஐஜி மகேஷ் ஐபிஎஸ் உத்தரவின்பேரில் கூடுதல் காவல்துறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிராமம் உள்ளிட்ட பல பகுதிகளில் துப்பாக்கிகளா?
இந்தச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை நாட்டுத் துப்பாக்கி எனக் காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
மேலும், சேங்குன்றம் கிராமத்திலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பலரிடம் உரிமம் இல்லாத துப்பாக்கிகள் இருப்பதாகக் கூறப்படும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் செல்வாக்கு மிக்க உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவோர் சட்டவிரோதமாகத் துப்பாக்கிகளை வைத்திருப்பதாகக் கூறப்படும் புகார்களும் உரிய விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
உளவுத்துறைக்கு இத்தகைய தகவல்கள் முன்கூட்டியே கிடைத்து அதுகுறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டும் கூட அவை கண்டு கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.
குறிப்பாக இல்லீகள் தொழில் செய்பவர்களை நோக்கி சில அதிகாரிகள் நட்புக்கரங்களை நீட்டியிருப்பதே இதற்கு காரணம் என்று உளவுத்துறையினர் குமுறுகிறார்கள்.
ஒரு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபரைப் பிடிக்கச் சென்ற காவல்துறையினருக்கே கத்தி வெட்டு விழும் அளவுக்கு நிலைமை சென்றிருப்பது சாதாரணமான விஷயமல்ல.
எனவே, சேங்குன்றம் கிராமம் மட்டுமின்றி வேலூர் மாவட்டம் முழுவதும் உரிமம் இல்லாத துப்பாக்கிகள் குறித்து சிறப்புச் சோதனை நடத்தி, சட்டவிரோத ஆயுதங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும். இதற்காக உளவுத்துறை அளித்ததாகக் கூறப்படும் தகவல்கள் மீதும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கொலை, துப்பாக்கிச் சூடு, காவல்துறையினருக்கே காயம் என அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவங்களால் குடியாத்தம் பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
தமிழகம் முழுவதும் நடந்த தீபாவளிக்கொலைகளினால் பதற்றமாக உள்ள நிலையில் எதிர்கட்சிகள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் குடியாத்தம் சம்பவம் பிரச்சனையை கிளப்பியிருக்கிறது.
ஒரு பொது வெளியில் பேருந்து நிறுத்தம் அருகில் நடந்த சம்பவத்தை சாதாரணமாக கடந்துவிட முடியாது. அங்கு ஓபி இருக்கும், போலீசார் இருப்பார்கள் அல்லவா?
எது எப்படியோ இந்த கொலையினால் பதற்றம் ஏதும் நிகழாமல் இருக்க காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இன்னிலையில் பூவரசனால் தாக்கப்பட்ட போலீசார் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதி பட்டிருக்கின்றனர்.
அவர்களை வேலூர் மாவட்ட எஸ்பி சிவராமன் ஐபிஎஸ் அவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் அதன் பின்னர் அவர் செய்தியாளிடம் கூறுகையில் கடந்த மூன்றாம் தேதி அன்று வெளியூரை சேர்ந்த ஒருவர் ஞானவேலின் கிராமத்திற்கு வந்த போது பூவரசனை ஞானவேல் கண்டித்துள்ளார்.
எதற்காக வெளியூர்காரர் நம்ம ஊருக்குள் வருகிறார் என்று கேள்வி எழுப்பவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
இதன் காரணமாகவே இந்த பிரச்சனை ஏற்பட்டதாக விசாரணையில் தெரிய வந்திருக்கிறது அதேபோல் காவல்துறையும் வனத்துறையும் இணைந்து கிராமம் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஆயுதங்கள் இருந்தால் பறிமுதல் செய்யப்படும் என்று சொன்னார்.
மேலும் பூவரசன் பதுக்கி வைத்திருந்த ஆயுதத்தை இன்று காலை பறிமுதல் செய்வதற்காக போலீசார் அழைத்துச் சென்றபோது எஸ்ஐ உட்பட இரு காவல்துறை அதிகாரிகளை கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓட முயன்றார் அவரை முட்டியில் சுட்டு போலீசார் பிடித்தனர் என்று சொன்னார்
குறிப்பு: எஸ் பி அவர்கள் குறிப்பிட்ட வெளியூர்க்காரர் யார் என்பது குறித்து சில தகவல்கள் கிடைத்திருக்கின்றன அவர் பெயர் விக்னேஸ்வரன் ஒடுக்கத்தூர் பகுதியை சேர்ந்தவர். பூவரசன் சிறையில் இருக்கும் போது அவருக்கும் இவருக்கும் நட்பாம் இதற்காகவே ஞானவேல் அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. எனவே காவல்துறை தீவிரமாக விசாரித்தால பல உண்மைகள் அம்பலமாகும் என்று தெரிகிறது.

admin
