மாணவர்களுக்கு மொட்டை அடிக்கச் சொல்லிய அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பேச்சு – மாணவர் சங்கங்கள் போர்க்கொடி

மாணவர்களுக்கு மொட்டை அடிக்கச் சொல்லிய அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பேச்சு – மாணவர் சங்கங்கள் போர்க்கொடி

செய்தி: வல்லம் மகேசு,
பள்ளி மாணவர்கள் முறையாக முடி வெட்டிக்கொண்டு வராவிட்டால் அவர்களுக்கு மொட்டை அடிக்கலாம் என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசிய விவகாரம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அயன்ரெட்டியபட்டியில் நடைபெற்ற பள்ளி நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், மாணவர்களின் தோற்றம் மற்றும் சிகை அலங்காரம் குறித்துப் பேசிய கருத்துகள் தற்போது கடும் எதிர்ப்பைச் சந்தித்துள்ளன.

அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு மாணவர் சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துப் போர்க்கொடி தூக்கியுள்ளன. மாணவர்களின் தன்மானத்தையும் தனிநபர் உரிமையையும் பாதிக்கும் வகையில் இத்தகைய கருத்துகள் அமைந்துள்ளதாக எதிர்ப்பாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.

கல்வி நிலையங்களில் மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் சீருடை தொடர்பான விதிமுறைகளைப் பின்பற்றச் செய்வதற்குப் பதிலாக, மொட்டை அடிப்பது போன்ற கருத்துகளை முன்வைப்பது சரியான அணுகுமுறையா என்ற விவாதமும் எழுந்துள்ளது.

அமைச்சரின் பேச்சு அரசியல் மற்றும் மாணவர் அமைப்புகள் மத்தியில் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.