இல்லம் தேடி கல்வி:- பாமக ஊராட்சி மன்ற தலைவர் அசத்தல்!

கு.அசோக்
கம்மவான்பேட்டை கிராமத்தில் அரசு பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆற்றலை வளர்க்கும் வகையில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் அறிவியல் நேரடி செயல்முறைகள் செய்து காட்டி - பாமக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் சார்பில் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
வேலூர்மாவட்டம், கணியம்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்டம் மூலம் மாணவர்களின் அறிவியல் ஆற்றலையும் அறிவு ஆற்றலையும் வளர்க்கும் வகையில் அறிவியல் நேரடி செய்முறை செய்யப்பட்டது.
நிகழ்ச்சி கம்மவான்பேட்டை பாமக ஊராட்சிமன்ற தலைவர் கவிதா முருகன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கணியம்பாடி பா.ம.க. ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயலட்சுமி எழுமலை பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன் உள்ளிட்டோரும் திரளான மாணவர்களும் பங்கேற்றனர்.
இதில் அறிவியல் ஆர்வலரும் வானவில் அறிவியல் இயக்க தலைவருமான விஸ்வநாதன் மாணவர்களுக்கு நேரடியாக அறிவியலின் பயன்பாடுகள் மற்றும் அறிவியல் இயக்கம் குறித்து நேரடியாக செயல்முறைகளை செய்து மாணவர்களுக்கு விளக்கினார் பின்னர் மாணவ,மாணவிகளுக்கு நோட்டுபுத்தகங்களும் வழங்கப்பட்டது.